நான்காவது திருமணம் செய்யப்போவதாக அறிவித்த 60 வயது நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3-வது மனைவி
பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு, தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி தன்னை கொல்ல முயற்சிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நரேஷ் பாபு. இவர் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் ஆவார். நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகிவிட்டது. இந்த மூன்று திருமணமும் தோல்வியில் முடிந்ததை அடுத்து தற்போது 4-வது திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார் நரேஷ்.
கடந்த ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று, பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் உடன் கேக் வெட்டி கொண்டாடி, அவருக்கு லிப் கிஸ் கொடுத்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்து தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார் நரேஷ். இருவருமே தற்போது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வைரலான கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல் செய்தி... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த தாய் மேனகா
இந்நிலையில், நடிகர் நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நரேஷ் பாபு, ரம்யா ரகுபதி தன்னை கொல்ல முயற்சி செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்ததில் இருந்தே ரம்யா தன்னை டார்ச்சர் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னிடம் ரூ.10 கோடி கேட்பதாகவும், தராவிட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாக நரேஷ் தெரிவித்துள்ளார். அதோடு தெலங்கானா நீதிமன்றத்தில் தனக்கு ரம்யாவிடம் இருந்து விவாகரத்து அளிக்கக் கோரியும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மனுதாக்கல் செய்துள்ளாராம் நரேஷ். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... AK62 : டுவிட்டரில் சைலண்டாக விக்னேஷ் சிவன் பார்த்த வேலையால் அஜித் ரசிகர்கள் குழப்பம்! என்ன இப்படி பண்ணிட்டாரு?