Asianet Tamil News Live: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு!!
Feb 22, 2023, 10:22 PM IST
![Tamil News live updates today on february 22 2023](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Tamil News live updates today on february 22 2023](https://static-gi.asianetnews.com/images/01gswwqmeezyvqgg9tk8kddzhq/ffg_900x450xt.jpg)
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னதாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதெபோல் பொதுக்குழுவுக்கு இடைக்கால பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
10:22 PM
26 பெண்களை திருமணம் செய்த 60 வயது முதியவர்.. மொத்தம் 100 கல்யாணம் பண்ணனும்.. முதியவரின் விபரீத ஆசை !
60 வயது முதியவர் ஒருவர், அவருடைய வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, 26 முறை திருமணம் செய்துள்ளார்.
8:48 PM
Fancy Number : ஸ்கூட்டி விலை ரூ.90 ஆயிரம்.. ஆனா வண்டி நம்பர் விலை ரூ.1.12 கோடி - யார்ரா நீங்கல்லாம்.?
தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.
8:30 PM
பாஜகவின் உள்நோக்கம்.. ஆளுநர் வேலையை எப்போது செய்ய போகிறார்.? அமைச்சர் பொன்முடி அட்டாக்
ஆளுநர் வேலையை எப்போது செய்ய போகிறார் என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
8:10 PM
சாலை விபத்தில் பலியான காவலர்.. குடும்பத்துக்கு 24 லட்சம் நிதி கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவலர்கள்
சாலை விபத்தில் பலியான காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 24 லட்ச ரூபாய் நிதி திரட்டி நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
7:03 PM
திமுக கட்சிக்காரர்கள்.. தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் கல்விக்கு ஒதுக்குங்கள் - அண்ணாமலை அட்டாக் !!
பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6:31 PM
இந்த சகுனங்கள் போதும்.. நீங்க சீக்கிரமாக பணக்காரர் ஆயிடுவீங்க! பணம் கொட்டும்.!!
சகுன பலனகள் சுப சகுனம், அசுப சகுனம் என்று பிரித்தறியப்படுகின்றன. சகுனம் போன்றே நிமித்தம் எனும் முறையிலும் பலன் சொல்லப்படுவது உண்டு.
5:25 PM
நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?
ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு திரு.சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
4:18 PM
மணமேடையில் திருமணம் ஜோடி செய்த காரியம்.. ஷாக்கான உறவினர்கள் - வைரல் வீடியோ
திருமணத்தின் போது, திருமண ஜோடி ஒன்று சினிமா பாட்டுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
3:54 PM
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதனை கண்டித்து பாஜக நிர்வாகி குஷ்பு அதிரடியாக கருத்தை தெரிவித்துள்ளார்.
12:15 PM
சென்னையில் திடீர் நிலநடுக்கம்? அலுவலகத்தில் இருந்து அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்.. சாலையில் தஞ்சம்.!
சென்னையில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11:17 AM
அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..! அதிரடியாக களத்தில் இறங்கிய திமுக அரசு
ராணுவ வீரர் பிரபு கொலைக்கு கண்டனம் தெரிவித்து அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
11:15 AM
மயில்சாமியை தொடர்ந்து... பிரபல காமெடி நடிகை திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
மயில்சாமியை தொடர்ந்து பிரபல காமெடி நடிகை சுபி சுரேஷ் மரணமடைந்து இருப்பது தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
10:36 AM
குண்டு போடுவோம் என தமிழக அரசை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்.! இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக-செல்வப்பெருந்தகை
தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவவீரர் என்றும் கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் பேசிய அநாகரீகமான, ஆபத்தான பேச்சுகளை உடனடியாக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
9:42 AM
கமலாலயம் கடல் போலத் தோற்றமளிக்கும் ஆனாலும் அது குளம்தான்- பாஜகவை சீண்டும் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் சென்றவர். கமலாலய குளம் தொடர்பாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
9:27 AM
வாரிசு முதல் தக்ஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீசாகி சக்கைப்போடு போட்ட வாரிசு திரைப்படம் இன்று (பிப்ரவரி 22) ஓடிடி-யில் ரிலீசாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சம்யுக்தா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி உள்ளது. மேலும் படிக்க
9:04 AM
அடம்பிடிக்கும் ஆளுநர் ரவி..! ஆர்.எஸ்.எஸ் முகவராக செயல்படுகிறார்- மத்திய அரசுக்கு எதிராக சீறும் மார்க்சிஸ்ட்
தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டை சீர்குலைத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
8:45 AM
அனிருத் இல்லை... தனுஷின் 50-வது படத்திற்கு இசையமைக்கப்போவது இவரா? - கசிந்த தகவல்
நடிகர் தனுஷ் தனது 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கவும் உள்ளார் என கூறப்படும் நிலையில், அப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
8:29 AM
சென்னையில் சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி.. பிரபல ரவுடியை சுட்டுபிடித்த பெண் எஸ்.ஐ..! நடத்தது என்ன?
சென்னை அயனாவரத்தில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பெண்டு சூர்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
8:28 AM
Power Shutdown in Chennai: அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
8:06 AM
அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீரென தூக்கிட்டு தற்கொலை.. இது தான் காரணமா?
புதுச்சேரி உழவர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8:06 AM
இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதுல இதுவேற! ஈரோடு கிழக்கில் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!அதிர்ச்சியில் ஓபிஎஸ்
ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
8:05 AM
சென்னையில் சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி.. பிரபல ரவுடியை சுட்டுபிடித்த பெண் எஸ்.ஐ..! நடத்தது என்ன?
சென்னை அயனாவரத்தில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பெண்டு சூர்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.