நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?
ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு திரு.சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
நடன இயக்குனராகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இவருக்கு தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
காயத்ரி ரகுராமுக்கும், மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். தற்போது பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள காயத்ரி ரகுராம் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் காயத்ரி ரகுராம், எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி
சமீபத்தில் காயத்ரி ரகுராம் கொடுத்த பேட்டியில் ஏற்கனவே இருந்த பிரச்னையில் திருமாவளவன் நடந்துகொண்ட விதத்தில் என் மனதில் உயர்ந்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார். ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு திரு.சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன் என்று பதிவிட்டிருந்தார்.
அரசியல் வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயத்தையும், வலியையும் என்னால் உணர முடிகிறது. பொது வாழ்விற்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்க்கொள்ளவும், அவதூறுகளை கடந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது, அவதூறுகளை தாங்க முடியாதவர்கள் அற்ப வெற்றியக்கூட முடியாது.
எதற்காகவும் யாருக்காகவும் பயந்து தான் கொண்ட இலட்சியத்தை இழந்து விடக்கூடாதென்பது ஒவ்வொரு பெண்ணும் ஏற்க வேண்டிய உறுதிமொழி. அந்தவகையில் நீங்கள் மனம் கலங்காது தொடர்ந்து அரசியல் களமாடி மக்கள் தொண்டாற்றி வெற்றிகரமான அரசியல்வாதியாக திகழ வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்