அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..! அதிரடியாக களத்தில் இறங்கிய திமுக அரசு

ராணுவ வீரர் பிரபு கொலைக்கு கண்டனம் தெரிவித்து அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

A case has been registered against BJP leader Annamalai for holding a rally without permission

ராணுவ வீரர் கொலை- பாஜக போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில்  ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் சின்னச்சாமி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக சார்பாக நேற்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ம்ற்றும் பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கமலாலயம் கடல் போலத் தோற்றமளிக்கும் ஆனாலும் அது குளம்தான்- பாஜகவை சீண்டும் மு.க.ஸ்டாலின்

A case has been registered against BJP leader Annamalai for holding a rally without permission

மெழுகுவர்த்தி பேரணி

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் தமிழக அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு சேப்பாக்கத்தில் இருந்து சென்னை போர் நினைவு சின்னம் வரை மெழுகு வர்த்தி ஏந்தி பாஜக சார்பாக பேரணி செல்லப்பட்டது. இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

 

வழக்கு பதிவு செய்த போலீஸ்

இந்தநிலையில் சென்னையில் அனுமதியின்றி மெழுகு வர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரு.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சட்ட விரோதமாக கூடுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் படி 3500 பாஐகவினர் மீது   திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

குண்டு போடுவோம் என தமிழக அரசை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்.! இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக-செல்வப்பெருந்தகை
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios