அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீரென தூக்கிட்டு தற்கொலை.. இது தான் காரணமா?
நடராஜன், இன்று தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி உழவர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூரில் சேர்ந்தவர் நடராஜன் (65). கடந்த 1991 மற்றும் 1996ல் நடந்த தேர்தல்களில் உழவர்கரை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அதன்பிறகு 2011ல் என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வில்லியனூர் தொகுதியிலும், 2016 பொதுத்தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் மங்கலம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். புதுச்சேரியில் இவர் ஒரு முறை சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்துள்ளார். மேலும் அதிமுகவின் மாநில செயலாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், நடராஜன், இன்று தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக நடராஜனின் மரணம் அப்பகுதி மக்களிடமும் அக்கட்சி தொண்டரகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.