திருமணத்தின் போது, திருமண ஜோடி ஒன்று சினிமா பாட்டுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் சுவையான சம்பவங்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவை ஆகும்.
திருமண நிகழ்வுகளில் சில சமயங்களில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு கூட வாய்ப்பு உண்டு. அதில் ஒரு சில நிகழ்வுகள் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெளிநாடுகளில் திருமணத்தின் போது நடனம் ஆடுவது ஒரு வழக்கமான நிகழ்வாகும். தற்போது இந்த வழக்கம் நம் இந்தியாவிலும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. திருமண நிச்சயதார்த்தங்களிலும், முகூர்த்தங்களிலும் மணமகனும், மணமகளும் ஆடி வருகின்றனர். இதுபோன்ற காணொளிகள் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றிலும் காணலாம்.
திருமணம் போன்ற நிகழ்வில் மட்டும் இல்லாமல், இதர விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிரும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அண்மையில் திருமண விழா ஒன்றில் நடைபெற்ற மணமக்களின் நடனம் வைரலாகி வருகிறது.
புஷ்பா தி ரைஸ் படம் பான் இந்தியா படமாக வெளிவந்து மாஸ் ஹிட் அடித்தது. அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது.
வைரலான இந்த வீடியோவில், புதுமணத் தம்பதிகள் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலை எனர்ஜியுடன் ஆடியுள்ளார். இன்ஸ்டாகிராமில் simaksh_soni உடன் இணைந்து being_designer_simi இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்
