Power Shutdown in Chennai: அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

chennai power cut on february 22 see list of areas

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம் பகுதி:

செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, விஜிபி சீனிவாச நகர், கருமாரியம்மன் நகர், புதுதங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
  
கிண்டி பகுதி:

ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுண்ட், நங்கநல்லூர் மற்றும் ராமாபுரம் தொடர்புடைய துணை மின் நிலையங்கள்.

போரூர் பகுதி:

மங்காடு ஜனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், அப்பாவு நகர், கோவூர் குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, வி.ஜி.என்., கோவூர் காலனி, திருமுடிவாக்கம் சிட்கோ 8வது குறுக்குத் தெரு, டவர் லைன் பிரதான சாலை, சதீஷ் நகர், எஸ்ஆர்எம்சி மகாலட்சுமி நகர், கமலா நகர், திருமுருகன் நகர், திருமால் நகர், ரோஸ் கார்டன், தர்மராஜா கோயில் தெரு, காவனூர் சிறுகளத்தூர், மணிமங்கலம் சாலை, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், புதுப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கே.கே.நகர் பகுதி:

கே.கே.நகர் மேற்கு, எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சின்மயாநகர், ஆழ்வார்திருநகர், தசரதபுரம், அழகிரிநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

மாதவரம் லெதர் எஸ்டேட் பகுதி:

கேகேஆர் கார்டன், தபால்பெட்டி, பஜார் தெரு, உடையார் தோட்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மேலாக.

எண்ணூர் பகுதி:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், இடிபிஎஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios