MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • மயில்சாமியை தொடர்ந்து... பிரபல காமெடி நடிகை திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

மயில்சாமியை தொடர்ந்து... பிரபல காமெடி நடிகை திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

மயில்சாமியை தொடர்ந்து பிரபல காமெடி நடிகை சுபி சுரேஷ் மரணமடைந்து இருப்பது தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Feb 22 2023, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்தவர் சுபி சுரேஷ். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகை சுபி சுரேஷின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

நடிகை சுபி சுரேஷ், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலம் ஆனவர் ஆவார். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். காமெடி கலந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடித்துப்போனதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து சுபி சுரேஷுக்கு மலையாள படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... கிளாமர் அள்ளுதே... தாராள கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

34

சுபி சுரேஷ் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுத்து வழங்கியது சினிமாலா என்கிற நிகழ்ச்சி தான். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி மூலம் தான அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதையடுத்து படிப்படியாக முன்னேறி தற்போது மலையாள திரையுலகில் காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சுபி சுரேஷ், தற்போது திடீரென மரணம் அடைந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

44

நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழ் திரையுலகில் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தார், அதேபோல் தெலுங்கு நடிகர் தாரக் ராணாவும் சமீபத்தில் காலமானார். அந்த வரிசையில் தற்போது மலையாள நடிகை சுபி சுரேஷ் மரணமடைந்து இருப்பது மலையாள திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வாரிசு முதல் தக்ஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved