Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் திடீர் நிலநடுக்கம்? அலுவலகத்தில் இருந்து அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்.. சாலையில் தஞ்சம்.!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின.  இதனிடையே, துருக்கியை தொடர்ந்து இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தனர். 
 
sudden earthquake in Chennai
Author
First Published Feb 22, 2023, 12:05 PM IST

சென்னையில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின.  இதனிடையே, துருக்கியை தொடர்ந்து இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தனர். 

sudden earthquake in Chennai

அதன்படி கடந்த சில நாட்களாக இந்தியாவில் அசாம், சிக்கிம், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் 3 மாடி கட்டிடத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அலறியபடி வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். 

sudden earthquake in Chennai

நில அதிர்வு குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அண்ணாசாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியின் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios