இந்த சகுனங்கள் போதும்.. நீங்க சீக்கிரமாக பணக்காரர் ஆயிடுவீங்க! பணம் கொட்டும்.!!
சகுன பலனகள் சுப சகுனம், அசுப சகுனம் என்று பிரித்தறியப்படுகின்றன. சகுனம் போன்றே நிமித்தம் எனும் முறையிலும் பலன் சொல்லப்படுவது உண்டு.
ஜோதிட சாஸ்திரத்தில் சுப மற்றும் அசுப சகுனங்கள் பற்றியும் அதன் விளக்கங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம். மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூட, சகுனங்கள்,நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள்.
இன்றும் சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் மங்கல வாத்தியங்கள் முழங்கப் படுகின்றன. அதாவது அந்த நல்ல காரியங்கள் நடக்கும் நேரத்தில் அபசகுன வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க, மந்திர உச்சாடனங்களும், மங்கல வாத்திய ஒலிகளின் அதிர்வலைகளும் அதை நல்லதாக மாற்றிவிடும். பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதை அடுத்த முறை பார்த்தால் எரிச்சலடையாதீர்கள். அது பண வரவை குறிக்கும் சகுனமாகும்.
பொன்னிற அல்லது வெள்ளை நிறப் பாம்பைப் பார்த்தால் அது பண வரவைக் குறிக்கும். உங்கள் வாகனத்துக்கு எதிரே குரங்கு, நாய், பாம்பு அல்லது ஏதேனும் பறவை வந்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதற்கான சகுனம் அது.பச்சைப்பசேல் என்றிருக்கும் பசுமையான காட்சிகளைக் கண்டால் அது நீங்கள் விரைவில் செல்வந்தராகப் போவதன் அறிகுறியாகும்.
இதையும் படிங்க: நீங்கள் ஒருமுறை போனால் போதும், எல்லா பிரச்சனையும் தீரும்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள் பற்றி தெரியுமா?
பால், தயிர் போன்ற பால் சம்பந்தமான பொருட்களை அதிகாலையில் கண்டால், அது உங்களிடம் பணம் சேரப் போவதற்கான சகுனமாகும். பூஜை பொருட்கள் கொண்டு செல்லுதல், பெண் பூப்படைம் செய்தி, குழந்தை பிறந்த செய்தி வருதல், அழுக்கு நீக்கியத் துணியை கொண்டு வருதல், தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி, கன்னிபெண் நிறைகுடமாக தண்ணீர் கொண்டு வருதல், பூ மாலை கொண்டு வரும் காட்சி, பிரசவம் முடிந்து குழந்தையை கொண்டு வரும் காட்சி, கிரக பிரவேசம், திருமணம், பூணூல் கல்யாணம் ஆகியவற்றைக் காணுதல் போன்றவை ஆகும்.
மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லது ஆகும். இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். வீட்டில் பூஜை அறையில் காமாட்சி விளக்கு தவறுதல், பாம்பு கடிப்பது போல் கனவு காணுதல், பாம்பு நம் மேல் ஏறுதல், குங்குமம், விபூதி தவறுதல், பெரிய விபத்தில் இருந்து சிறு காயத்துடன் தப்பி பிழைத்தல் போன்றவைகளால் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.
கோவிலில், பூஜையில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறி என்றும் அவர்களை பிடித்து இருக்கும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை அகன்று போகிறது. இதுபோன்ற பல சகுனங்களை பற்றி நம்முடைய சாஸ்திர நூல்கள் கூறுகின்றது.
இதையும் படிங்க: மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..