நடிகர் தனுஷ், சம்யுக்தா, கென் கருணாஸ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில், வெங்கி அட்லூரி இலாயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'வாத்தி’ திரைப்படம், உலக அளவில் 3 நாட்களில் ₹51 கோடி வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

10:14 PM (IST) Feb 20
கேரளா திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி ஆலயம் இருக்கிறது. விஷ்ணு ஆலயம், கட்டிடக்கலை அழகு மற்றும் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம்.
09:39 PM (IST) Feb 20
ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம். ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு.
08:45 PM (IST) Feb 20
மேட்ரிமோனியல் செயலி மூலம் மனைவியைச் சந்தித்த மாப்பிளை ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மனைவி.
07:57 PM (IST) Feb 20
துருக்கி சென்ற இந்திய நிவாரணக் குழுக்களை உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி.
06:30 PM (IST) Feb 20
திருச்சியில் நகை மீட்க ரவுடியை அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இருவரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
04:33 PM (IST) Feb 20
அதானி, அம்பானி, டாடா, பிர்லா ஆகியோரை விட எனது நேரத்தின் மதிப்பு அதிகம். - பாபா ராம்தேவ் பேச்சு.
03:25 PM (IST) Feb 20
இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் என்று அதிமுகவினர் குற்றஞ்சாட்டி உள்ளார்கள்.
03:04 PM (IST) Feb 20
திருச்சியில் உள்ள உறையூரில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
02:23 PM (IST) Feb 20
பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
01:58 PM (IST) Feb 20
எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாம் தர்ம யுத்தம் துவங்கியுள்ளதாகவும், ஒரு தொண்டனை கட்சி தலைமையில் அமர வைக்கும் வாய்ப்பை உருவாக்குவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
01:54 PM (IST) Feb 20
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதிய உணவிற்கு பிறகு கார் மூலம் ஈரோடு செல்ல உள்ளார்.
01:29 PM (IST) Feb 20
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றாலும் திமுக வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
12:39 PM (IST) Feb 20
அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்; முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம் என ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
12:30 PM (IST) Feb 20
ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் நாயகனாக நடித்து வரும் வீரன் என்கிற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. மேலும் படிக்க
12:12 PM (IST) Feb 20
மாரடைப்பால் மரணம் அடைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடன் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் படிக்க
10:52 AM (IST) Feb 20
மாரடைப்பால் நேற்று மரணமடைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
10:50 AM (IST) Feb 20
சென்னையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் மட்டுமல்ல அவர்களின் வீட்டில் உள்ள அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10:50 AM (IST) Feb 20
நடிகர் மயில்சாமியின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.சிவ வாத்தியங்கள் முழங்க நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
10:49 AM (IST) Feb 20
செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் அருகே நடைபெற்ற ஹைபிரிட் சவுண்டு ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அவர் வருகையின் போது ரெட் கார்பெட்டில் தடுக்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
09:50 AM (IST) Feb 20
புதிய வீட்டை தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி ஜோடியாக கட்டத் தொடங்கினாலும், தற்போது அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதால், இந்த பிரம்மாண்ட மாளிகையை தனது தாய், தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் தனுஷ். மேலும் படிக்க
09:32 AM (IST) Feb 20
நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை சிவராத்திரி பூஜையில் பங்கேற்றபோது, ரஜினிகாந்தை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்து அங்குள்ள லிங்கத்திற்கு பாலாப்ஷேகம் செய்ய வைக்க வேண்டும் அது தனது நீண்ட நாள் ஆசை என டிரம்ஸ் சிவமணியிடம் கூறி இருந்தாராம். மேலும் படிக்க
09:28 AM (IST) Feb 20
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தனது கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேளுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
08:58 AM (IST) Feb 20
அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம். இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில் தான் எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில் கூட கே.பி.முனுசாமி கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம். அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
08:43 AM (IST) Feb 20
திடீரென நிகழ்ந்த மரணத்தால் காஷ்மீரில் நடைபெற்று வந்த லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
08:13 AM (IST) Feb 20
ஈரோட்டில் பொதுமக்களை அடைத்து வைத்திருக்கும் கொடுமையை தேர்தல் ஆணையம் நேரில் பார்வையிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த வலியுறுத்தியுள்ளார்.
07:34 AM (IST) Feb 20
எடப்பாடி பழனிசாமி தன்னை பரமசிவனின் கழுத்திலுள்ள பாம்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில், அவர் கழுத்தில் பாஜக என்ற நச்சுப்பாம்பு சுற்றியிருக்கிறது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
07:34 AM (IST) Feb 20
ராமநாதபுரம் அருகே ஆட்டோ - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.