- Home
- Cinema
- ரஜினி வீடருகே.. போயஸ் கார்டனில் பிரம்மாண்ட மாளிகை கட்டி பெற்றோருக்கு பரிசாக வழங்கிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்
ரஜினி வீடருகே.. போயஸ் கார்டனில் பிரம்மாண்ட மாளிகை கட்டி பெற்றோருக்கு பரிசாக வழங்கிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்
போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள நடிகர் தனுஷ், அந்த வீட்டை தனது பெற்றோருக்கு பரிசாக வழங்கி நெகிழ வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதற்கு அடுத்த படியாக கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே நடிகர் தனுஷ் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் இடம் ஒன்று வாங்கி அங்கு சொந்த வீடு ஒன்றை கட்டத் தொடங்கினார். அந்த சமயத்தில் நடந்த பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். தற்போது அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்த வீட்டுக்கு சமீபத்தில் கிரஹபிரவேசமும் நடந்துள்ளது. அதன் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்துடன் நடிச்சதுக்கே இப்படி ஒரு மாற்றமா? BMW பைக் வாங்கி ரைடு போக தயாரான மஞ்சு வாரியர்..!
இந்த கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொண்ட இயக்குனர் தனுஷ் ரசிகர் மன்ற தலைவருமான சுப்ரமணியம் சிவா கலந்துகொண்டு, அப்போது அந்த புது வீட்டில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், தம்பி தனுஷின் புதிய வீடு, கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வீட்டை தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி ஜோடியாக கட்டத் தொடங்கினாலும், தற்போது அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதால், இந்த பிரம்மாண்ட மாளிகையை தனது தாய், தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் தனுஷ். சகல வசதியும் உள்ள பிரம்மாண்ட மாளிகையை ரூ.150 கோடி செலவில் தனுஷ் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் கட்டியுள்ள இந்த பிரம்மாண்ட வீடு, அவரின் மாஜி மாமனார் ரஜினிகாந்தின் வீடருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Mayilsamy: “ஆண்டவனின் கணக்கு.. மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” - நடிகர் ரஜினிகாந்த் உறுதி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.