அஜித்துடன் நடிச்சதுக்கே இப்படி ஒரு மாற்றமா? BMW பைக் வாங்கி ரைடு போக தயாரான மஞ்சு வாரியர்..!
அஜித்துக்கு ஜோடியாக துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியர் 'BMW' பைக் வாங்கியுள்ளதை, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும், பிரபல நடிகை மஞ்சு வாரியர் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படத்தில் தனுசுக்கு ஜோடியாக, பச்சையம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.
முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட்... வைரலாக்கும் ரசிகர்கள்..!
மலையாள நடிகையாக இருந்தாலும், பச்சையம்மா கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தார். நடிப்புக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் மஞ்சு வாரியர், தமிழில் இரண்டாவது முறையாக நடிகர் அஜித்துக்கு ஜோடியாக 'துணிவு' படத்தில் நடித்திருந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படத்தில், கண்மணியாக நடித்து மிரட்டி இருந்தார். அதே போல் ஆக்ஷன் காட்சிகளிலும் தெறிக்க விட்ட மஞ்சு வாரியர் நடிப்பை தாண்டி பைக் ரைடிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஏற்கனவே துணிவு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அஜித்துடன், பைக் ரைடில் ஈடுபட்ட இவர் பின்னர், டூ வீலர் உரிமத்தையும் வாங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே...
மஹாசிவராத்திரியை முன்னிட்டு அண்ணன் சத்தியநாராயணனுடன் சூப்பர் ஸ்டார் எங்கு சென்றார் தெரியுமா?
இதைத்தொடர்ந்து, தற்போது மஞ்சு வாரியர், அஜித் கொடுத்த இன்ஸ்பிரேஷன் காரணமாக, மஞ்சு வாரியர் தற்போது புதிய பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், வெளியிட்டு என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி அஜித் சார் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'வாரிசு' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?