'வாரிசு' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?
விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அண்மையில் வெளியான 'வாரிசு' படத்தில், தளபதி விஜய்க்கு அம்மா வேடத்தில் நடித்த ஜெயசுதாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. பொங்கல் விருந்தாக வெளியான இந்த திரைப்படம், ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பெற்றது. அதே போல் ஜெயசுதா மற்றும் விஜய்யின் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்கள் மனதை வருடியது. அந்த அளவிற்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஜெயசுதா.
இப்படம் வெளியாகி இதுவரை 310 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் 'வாரசூடு' என்ற பெயரில் வெளியான இப்படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு அண்ணன் சத்தியநாராயணனுடன் சூப்பர் ஸ்டார் எங்கு சென்றார் தெரியுமா?
மேலும் விஜயின் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படமாக இருந்த 'பிகில்' படத்தின் வசூலை, இப்படம் முறியடித்து விட்டதாகவும் ரசிகர்கள் கொண்டாடினர். 'வாரிசு' படத்திற்கு போட்டியாக வெளியான 'துணிவு' திரைப்படமும் கிட்டத்தட்ட 300 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதாவின் சம்பளம் குறித்த தகவல்தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கே சம்பளமாக 10 முதல் 20 லட்சம் வரை கொடுக்கப்படுவது வழக்கம். துணை நடிகர், நடிகையாக நடிப்பவர்களுக்கு அதைவிட குறைவாகவே கொடுக்கப்படுகிறது.
முன்னணி இயக்குனர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய விஜய் சேதுபதி..! இது தான் காரணமா?
ஆனால் 'வாரிசு' படத்தில் விஜய்யின் அம்மா வேடத்தில் நடித்த நடிகை ஜெயசுதாவிற்கு சுமார் 30 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகை சேர்ந்தவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சம்யுக்தா, சங்கீதா போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். வாரிசு படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி இப்படம் அமேசான் ஓடிடி பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமந்தா செய்வதை பார்த்து பயந்துவிட்டேன்... உடனே நிறுத்த வேண்டும்! நடிகர் மனோஜ் பாஜ்பாய் அட்வைஸ்!