MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முன்னணி இயக்குனர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய விஜய் சேதுபதி..! இது தான் காரணமா?

முன்னணி இயக்குனர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய விஜய் சேதுபதி..! இது தான் காரணமா?

நடிகர் விஜய் சேதுபதி, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகி விட்டதாக வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 18 2023, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி அரண்மனை 4 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

25

1995 ஆம் ஆண்டு நடிகை குஷ்பு மற்றும் ஜெயராம் நடித்த 'முறைமாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இந்த படத்தில் குஷ்பூ உடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாகவும் மாறி இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்த படத்தை தொடர்ந்து, கமர்ஷியல் படங்களான,  உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னை தேடி, போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுந்தர்.சி சமீப காலமாக திகில் படங்களை இயக்கி வருகிறார்.

சமந்தா செய்வதை பார்த்து பயந்துவிட்டேன்... உடனே நிறுத்த வேண்டும்! நடிகர் மனோஜ் பாஜ்பாய் அட்வைஸ்!
 

35

அந்த வகையில் இவர் இயக்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை, திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து... இப்படத்தின் அடுத்தடுத்த சீரிஸ் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சுந்தர் சி கடந்த 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 படத்தை இயக்கியிருந்தார். இதில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, ராஷி  கண்ணா ஹீரோயினாகவும், முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

45

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'காபி வித் காதல்' படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே மீண்டும் திகில் படத்தை கையில் எடுக்க உள்ள சுந்தர் சி, அரண்மனை 4 படத்தை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானத்தை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக்கின. இதனை உறுதி செய்யும் விதமாக சுந்தர் சி மற்றும் சந்தானம் இருவரும் விஜய் சேதுபதியுடன் ஒன்றாக சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி அதிரடியாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது! 'வாத்தி' பட இயக்குனரின் சர்ச்சை கருத்துக்கு குவியும் ஆதரவும்.. எதிர்ப்பும்

55

விஜய் சேதுபதி தற்போது 'ஜவான்' படத்தில் நடித்து வரும் நிலையில், அரண்மனை 4 படத்தை சுந்தர் சி ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நாட்களில் இன்னும் சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால், நாள் ஒதுக்க முடியாத காரணத்திற்காக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில், சந்தானத்துடன் நடிக்க உள்ள மற்றொரு ஹீரோ யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved