சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது! 'வாத்தி' பட இயக்குனரின் சர்ச்சை கருத்துக்கு குவியும் ஆதரவும்.. எதிர்ப்பும்
'வாத்தி' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இட ஒதுக்கீடு குறித்து, நேர்காணல் ஒன்றில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தனுஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தை, இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிடும் இப்படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு படிப்பு என்பது, எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துக் கூறும், சமூக கருத்துக்கொண்ட படமாக இப்படம் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் வீட்டில் வருமான வரித்துறை 4 மணிநேரம் அதிரடி ரெய்டு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?
தனுஷ், ஒரு சிறப்பாக ஆசிரியராகவும், எமோஷனல், ஆக்சன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது.
vaathi song Naadodi Mannan lyric video dhanush GV Prakash Kumar
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'வாத்தி' படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக, தெலுங்கு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த இயக்குனர் வெங்கி அட்லூரி, தொகுப்பாளர் நீங்கள் கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து காட்டுவேன். சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது.. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை மட்டும் மட்டும் நடைமுறைப்படுத்துவேன் என பேசி உள்ளார்.
பிரபாஸின் விருந்தோம்பல் ஆச்சர்யப்பட வைக்கும்! பிரமித்து கூறிய நடிகை தமன்னா!
வெங்கி அட்லூரியின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் எதிர்க்கும் வகையிலான பதிவுகளை போட்டு வருகின்றனர்.