ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்த வேண்டும்.! திமுகவிற்கு எதிராக சீறும் பிரேமலதா விஜயகாந்த்

ஈரோட்டில் பொதுமக்களை அடைத்து வைத்திருக்கும் கொடுமையை தேர்தல் ஆணையம் நேரில் பார்வையிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த வலியுறுத்தியுள்ளார்.

Premalatha has insisted that the Election Commission should stop the Erode elections

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சித்தலைவர்களும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். ஈரோடு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் எதிர்கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு பொதுமக்கள் சென்று விடக்கூடாது என்பதற்காக கொட்டகை அமைத்து அடைத்து வைக்கப்படுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து பிரேமலதா விஊயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஈரோடு கிழக்கு தொகுதி தங்களுக்கு புதிது இல்லையென தெரிவித்தவர், 2011 ஆம் ஆண்டு தேமுதிக வென்ற தொகுதி என தெரிவித்தார். 

ஆன்லைன் சூதாட்டம்: 45வது உயிர் போயிடுச்சு! ஆளுநர் மனம் இரங்காதா? - பாமகவின் அன்புமணி ராமதாஸ் வேதனை

Premalatha has insisted that the Election Commission should stop the Erode elections

ஈரோட்டில் முகாமிட்ட அமைச்சர்கள்

ஈரோட்டில் பூத்திற்கு ஒரு அமைச்சர் இருந்து வாக்கு சேகரிக்கின்றனர். அமைச்சர்கள் மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. வாக்குக்கு பணம் கொடுக்க வந்தவர்கள் என விமர்சித்தார். திமுகவினர் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் தேர்தல் நேரத்தில் நேர்மையாக வாக்களியும் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்துவரி, நூல் விலை, பால் விலை என அடிப்படை பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்துள்ளது தேர்தலையொட்டி துறை சார்ந்த பணிகளை விட்டு விட்டு அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றாத நிலையில், முன்னேற்றமே இல்லாமல் மக்களை வஞ்சிக்கும் அரசுதான் உள்ளது.

Premalatha has insisted that the Election Commission should stop the Erode elections

தேர்தலை நிறுத்த வேண்டும்

மற்ற கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக  மக்களை ஆடு மாடு போல் அடைத்து வைத்துள்ளனர். மக்களை அடிமை போல் நடத்துவதை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கிற்கு வந்து பார்த்து தேர்தலை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்கள் பிரச்னையை பற்றி பேசாமல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி சாடிக் கொள்கின்றன. பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். என்னென்ன நல்ல திட்டங்கள் இருந்ததோ அதையெல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள் என பிரேமலதா விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது.. சும்மா இறங்கி அடித்த ப.சிதம்பரம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios