திருச்சியில் உள்ள உறையூரில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி உறையூர் குளுமாயி அம்மன் கோயில் அருகே துரைசாமி, சோமசுந்தரம் உள்ளிட்ட 2 ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ரவுடிகள் சேர்ந்து காவலரை அரிவாளால் வெட்டியதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவருக்கும் கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரவுடிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திருச்சியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?
