Asianet News TamilAsianet News Tamil

Trichy: துப்பாக்கிச் சூடு: எஸ்கேப் ஆன ரவுடிகளை சுட்டு பிடித்த போலீஸ்.! திருச்சியில் பரபரப்பு - என்ன நடந்தது?

திருச்சியில் நகை மீட்க ரவுடியை  அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இருவரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trichy gun shooting Police catch escaped rowdies what happened
Author
First Published Feb 20, 2023, 6:27 PM IST

திருச்சி மாவட்டம், உறையூரில் இரண்டு ரவுடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை  சேர்ந்தவர்கள் துரைசாமி(40) மற்றும் சோமசுந்தரம் (38) என்கிற சாமி இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் என பல வழக்குகள் உள்ளது.

Trichy gun shooting Police catch escaped rowdies what happened

இதில் திருச்சி மாவட்டத்தில் பல வழக்குகளும் தஞ்சை புதுக்கோட்டை, அரியலூர். நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளது.  இந்த நிலையில் அவர்கள் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க காவல்துறையினர்  இருவரையும் குழுமாகி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அவர்கள் இருவரும் காவல்துறையினரை  தாக்கி விட்டு அவர்கள் ஜிப்பிலிருந்து இறங்கி தப்பித்துள்ளனர். அவர்களை விரட்டி பிடிக்கும் என்ற போது அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாலால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதையும் படிங்க..உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக

Trichy gun shooting Police catch escaped rowdies what happened

அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் குற்றவாளிகளை பிடிக்கவும் இருவரையும் காலில் சுட்டு போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளையும் காவல்துறையினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருவரும் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவார்கள். காலையில் இருவரையும் கைது செய்த நிலையில் தப்பியோட முயற்சி செய்தார்கள். உடனே அப்போது, போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கைது செய்தோம் என்று விளக்கமளித்தார். காவல்துறையின் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை திருச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios