உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசை ஆதரித்து இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து , ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக, அதிமுக என எல்லா கட்சிகளை சேந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்று ஈரோடு தேர்தல் களத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல மற்றொரு பக்கம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து பாஜக தரப்பில் தெரிவித்ததாவது, இன்று மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும், இரவு 8 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
இதையும் படிங்க..வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய் !
பிறகு இதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் தனது 2வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் ஓங்காளியம்மன் கோவில், காந்தி சிலை, மற்றும் வி.வி.சி.ஆர். நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தின் போது, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது என்று அதிமுகவினர் கூறியுள்ளனர்.
பாஜகவின் அடையாளத்துடன் சிறுபான்மையின மக்கள் பகுதிக்கு செல்லும்போது அதன்மூலம் அவர்களது வாக்குகளை அதிமுக இழக்க நேரிடலாம் என்பதால் இப்படியொரு நடவடிக்கை அதிமுக எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஈரோடு கிழக்கு தேர்தல் அனல் பறந்து வருவதால், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க..மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!