மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!
இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். தமிழ்நாடு முதல்வரின் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, டிஜிபி சைலேந்திரபாபு போன்றோர் வரவேற்றனர்.
திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் முர்முவை தமிழ்நாடு முதல்வரின் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி சைலேந்திரபாபு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர். பின்னர் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு அங்கிருந்து 2 மணிக்கு சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வருகை தந்து தனி விமானம் மூலமாக கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றார்.
கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்றார். ஈஷா யோகா மையத்தின் சத்குரு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேட்டரி காரில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பார்த்தார். இந்த வேளையில் பேட்டரி காரை சத்குரு ஓட்டி சென்றதோடு, யோகா மையம் மற்றும் அங்குள்ள லிங்கங்கள் பற்றிய விபரங்களை எடுத்து கூறினார்.
பிறகு அவர் தியான பீடத்தில் வழிபாடு செய்தார். தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழிபட்டார். இந்த வேளையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இதையடுத்து ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றுள்ளார்.
இதையும் படிங்க..வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய் !
வழக்கமாக மதுரைக்கு அரசு சார்பாக யார் வருகை புரிந்தாலும், மதுரையை சேர்ந்த அமைச்சர் பிடிஆர் அல்லது அமைச்சர் மூர்த்தி வரவேற்பார்கள். ஆனால் இந்த முறை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை தமிழக அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார். தற்போது இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியரசு தலைவரை வரவேற்ற விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே இப்படி செய்துள்ளது என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். அமைச்சர் என்ற முறையில் மண்டைக்காடு திருவிழாவில் தேர் வடம்பிடிக்க வந்த மனோ தங்கராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு நடக்கவிருந்த சமய மாநாட்டை நடத்தவிடாமல் தடுத்ததாகவும் மனோ தங்கராஜ் மீது புகார் செய்தனர். இப்படியுள்ள சூழலில் அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பி பாஜக போன்ற வலதுசாரி அமைப்புகளை வெறுப்பேற்றி உள்ளது என்று கூறுகிறார்கள் உடன்பிறப்புக்கள்.
இதையும் படிங்க..உடலுறுப்புகள் காணவில்லை.! சிபிஐ வேண்டும்! திமுக கவுன்சிலர் காரணம் - அமித்ஷாவுக்கு லெட்டர் போட்ட அண்ணாமலை..!