திமுகவை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ், ஆட்ட களத்தில் இல்லை.! நாக் அவுட் ஆகி விட்டார்- ஜெயக்குமார் கிண்டல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றாலும் திமுக வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஈரோடு தேர்தல்-முறைகேட்டில் திமுக
ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் திமுகவினர் முறைகேடுகளின் ஈடுபட்டு வருகிறார்கள் என குற்றம் சாட்டினார். ஈரோடு இடைத்தேர்தல் நடத்திருக்கும் நிலையில் ஜனநாயக விரோத செயல்களும் அத்துமீறல்களும் பண பட்டுவாடா வாக்காளர்களை அடைத்து வைத்து பணம் உணவு அளித்து வருகின்றனர்.
வாக்காளர்களை இன்பச் சுற்றுலா திமுகவினர் அழைத்து செல்வதாக குற்றம் சாட்டினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் அன்றாட வசூலை வங்கியில் செலுத்தாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் கடைகளுக்குச் சென்று வசூலித்து வருவதாக தெரிவித்தார்.
வாக்களித்த மை காய்வதற்குள் ஈவிகேஎஸ் சென்னைக்கு ஓடி விடுவார்..! ஈரோடு மக்களை எச்சரிக்கும் அண்ணாமலை
ஆட்ட களத்தில் ஓபிஎஸ் இல்லை
பணத்தால் நிச்சயம் காரியம் சாதிக்க முடியாது என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். ஓ பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி பயணிக்கிறார் அதனால் தான் மார்ச் மாதத்தில் விடியல் ஏற்படும் என சொல்வதாக விமர்சித்தார். ஓபிஎஸ் ஆட்ட களத்தில் இல்லையென்றும் அவர் நாக் அவுட் ஆகி விட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொலை கொள்ளை அன்றாடம் நடக்காத நாளே இல்லை என்றும் காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட விட்டால் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஜெயலலிதா என்னை அச்சுறுத்திய போது எனக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி..! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு