ஜெயலலிதா என்னை அச்சுறுத்திய போது எனக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி..! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
சின்னம், கொடி , கட்சி ஆகியவற்றை தாண்டியது தான் தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்த கமல்ஹாசன் இன்று இந்தியாவில் அது நடந்து கொண்டு இருப்பதாகவும், . நம்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். இந்தியனாக ஆதரவை கொடுக்க வேண்டியது என் கடமை என தெரிவித்துள்ளார்.
சூடு பிடிக்கும் பிரச்சாரம்
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளன. இந்தநிலையில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அதே போல அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு தொகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வாக்களித்த மை காய்வதற்குள் ஈவிகேஎஸ் சென்னைக்கு ஓடி விடுவார்..! ஈரோடு மக்களை எச்சரிக்கும் அண்ணாமலை
ஈவிகேஎஸ்க்கு ஆதரவாக கமல்
நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள். எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம். நானும் பெரியாரின் பேரன் தான் என்று பேசினார்.
உதவி வேண்டுமா கேட்டவர் கருணாநிதி
ஆபத்து காலத்தில் சின்னம், கொடி , கட்சி ஆகியவற்றை தாண்டியது தான் தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் அது நடந்து கொண்டு இருக்கிறது. நம்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். இந்தியனாக ஆதரவை கொடுக்க வேண்டியது என் கடமை விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது, என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார்.
இதையும் படியுங்கள்