நான் பெரியாரின் பேரன்!.. மக்கள் நலனுக்கு இதுதான் சரி! கூட்டணி குறித்து ஈரோட்டில் விளக்கம் சொன்ன கமல்ஹாசன் !!

விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது,  என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார். - கமல்ஹாசன் பேச்சு.

Actor Kamal Haasan's speech that I am Periyar's grandson at erode east by-election campaign

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து , ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Actor Kamal Haasan's speech that I am Periyar's grandson at erode east by-election campaign

இதையும் படிங்க..உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக

திமுக, அதிமுக என எல்லா கட்சிகளை சேந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்று ஈரோடு தேர்தல் களத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய கமல்ஹாசன், ஆபத்து காலத்தில் சின்னம், கட்சியை தாண்டியது தேசம் என்பதால் பரப்புரைக்கு வந்தேன். விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது,  என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார்.

Actor Kamal Haasan's speech that I am Periyar's grandson at erode east by-election campaign

இப்போது முதலமைச்சராக உள்ள மு.க ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். அது என் பிரச்சனை என்பதால் நான் மறந்துவிட்டேன். இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளேன். மாற்றத்தை கொண்டு வரும் திறன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறேன்.

நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள். எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம். நானும் பெரியாரின் பேரன் தான் என்று பேசினார்.

இதையும் படிங்க..BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios