இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் என்று அதிமுகவினர் குற்றஞ்சாட்டி உள்ளார்கள்.

இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம் என மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் காட்டமாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்ததாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க..நான் பெரியாரின் பேரன்!.. மக்கள் நலனுக்கு இதுதான் சரி! கூட்டணி குறித்து ஈரோட்டில் விளக்கம் சொன்ன கமல்ஹாசன் !!

இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம்.

Scroll to load tweet…

இஸ்லாமியர்களுக்காக என்றும் அதிமுக துணை நிற்கும் என்பதை ஈரோடு வாழ் இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டிய ரெட்ஜெயன்ட் கம்பனி நடிகராகவும் - திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராகவும் மாறிவிட்ட முன்னாள் மய்ய தலைவருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?