அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு

ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.  ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு.

Sellur Raju talked about Kamal Haasan erode east constituency by-election

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Sellur Raju talked about Kamal Haasan erode east constituency by-election

திமுக, அதிமுக என எல்லா கட்சிகளை சேந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில்  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. அப்போது, “காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும் திமுக அமைச்சர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.  பிரச்சாரத்தின் போது திமுக அமைச்சருக்கு அப்பகுதியில் ஓட்டு இல்லை அவரிடம் ஓட்டு கேட்கும் அளவுக்கு முட்டாள் இல்லை. அவரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்.

ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.  ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். எது மாதிரி இல்லாமல் புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.  புதிய கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு தருவது போல வாக்காளர்களை கவர்வதற்காக திமுக புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது.

இதையும் படிங்க..இது கபட நாடகம்.! “கோழைத்தனம்” திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராக மாறிய கமல்.. கடுப்பான அதிமுக

Sellur Raju talked about Kamal Haasan erode east constituency by-election

திருமங்கலம் ஃபார்முலா அரவக்குறிச்சி ஃபார்முலா தற்போது ஈரோடு கிழக்கு புதிய ஃபார்முலா கொண்டு வருகின்றனர்.  கமலஹாசனின் கொள்கை பணத்திற்கானது மட்டும். கமலஹாசன் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார். படம் நடிப்பதை விட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் அதனால் கால் சீட் இங்கு கொடுத்திருப்பார்.

கமலஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பது இல்லை அவர் உலக நாயகன் நல்ல நடிகர் ஆகவே பார்க்கின்றனர். கமலஹாசனை மக்கள் ரசித்து பார்ப்பார்கள் அவருடைய பேச்சை கேட்டால் ஓட்டு போடுபவர்களும் போட மாட்டார்கள். கமலஹாசன் பேச தெரியாது பேசினாலும் மக்களுக்கும் புரியாது.

திமுக நேற்று வந்த கட்சி இல்லை ஆட்களை பார்த்து யாரை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்பது தெரியும். கமலஹாசனை எந்த வகையில் ஆப் செய்தார்கள் என தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கிறோம். தேர்தல் ஆணையம் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு ஆளுங்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இதையும் படிங்க..“நான் அவள் இல்லை” கதறி அழுத கணவன்.! கில்லாடி மனைவி - திருமணத்துக்கு பெண் பார்ப்பவர்களே உஷார்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios