சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்.! பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை..! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஓபிஎஸ்
எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாம் தர்ம யுத்தம் துவங்கியுள்ளதாகவும், ஒரு தொண்டனை கட்சி தலைமையில் அமர வைக்கும் வாய்ப்பை உருவாக்குவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவின் தொண்டராக இருப்பதே பெருமை. எம்.ஜி.ஆர் மறைந்த போது இயக்கத்தில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். அவரது மறைவுக்கு பின் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றினார் ஜெயலலிதா, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் தொண்டர்களால் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை, எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ சிதைத்துவிட்டார்கள்.
ஜெயலலிதா என்னை அச்சுறுத்திய போது எனக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி..! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை
பொதுக்குழு கூட்டத்தில் .சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கு சென்று தீர்மானங்கள் ரத்து செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அறிவித்தார்கள். பொதுக்குழு கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை கூட சமர்பிக்க விடவில்லைதலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள், அவர்கள் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை.. அவர்கள் அந்த தகுதியை இழந்துவிட்டார்கள். தொண்டர்களுக்கு இருந்த மரியாதையை காலில் போட்டு மிதித்து விட்டதாக கூறினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாம் தர்மயுத்தம் துவங்கியுள்ளோம்,
களத்தில் மரியாதை இல்லை
ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொண்டோம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்ததும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்போம் என சொன்னோம். ஆனால் களத்தில் உரிய மரியாதை இல்லை. மக்கள் தீர்ப்பு என்ற ஒன்று உள்ளது. அது வரும் போது தெரியும் என கூறிய ஓ பன்னீர்செல்வம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ,இணை ஒருங்கிணைப்பாளராக ,முதலமைச்சராக ஒரு தொண்டன் அமரும் வாய்ப்பை உருவாக்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
திமுகவை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ், ஆட்ட களத்தில் இல்லை.! நாக் அவுட் ஆகி விட்டார்- ஜெயக்குமார் கிண்டல்