இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:10 AM (IST) Aug 31
ஆகஸ்ட் 31, 2025 அன்று மீன ராசிக்காரர்களுக்கான ஜோதிட பலன்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11:10 PM (IST) Aug 30
நான் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
10:46 PM (IST) Aug 30
பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் தனது குழந்தைப்பருவத் தோழியை பிரிய மனம் இல்லாத காரணத்தால், அவரை தனது கணவருக்கே இரண்டாவதாக திருமணம் செய்து வைத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தி உள்ளது.
10:27 PM (IST) Aug 30
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான மருத்துவ தேவையை உறுதி செய்யும் வகையில் அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ தேவைகளை செலவுகளை ஏற்கும் ஆயுஷ்மான் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
09:53 PM (IST) Aug 30
ஆசிய கோப்பை டி20 தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், போட்டி நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளும் அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் புதிய நேரத்தின்படிதான் நடைபெறும்.
08:41 PM (IST) Aug 30
சமூக ஊடகங்களில் டிரம்ப் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. முன்னதாக துணை அதிபர் ஜேடி வான்ஸ், டிரம்ப்க்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
08:28 PM (IST) Aug 30
இந்தியாவில் EV ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏதர் நிறுவனத்தின் வாகனங்களும் சந்தையில் பிரபலமாக உள்ளன. ஏதர் ரிஸ்டாவின் நவீன அம்சங்கள், மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டரின் 5 அற்புதமான அம்சங்களைக் காணலாம்.
06:40 PM (IST) Aug 30
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஐபிஎல் சீசனில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார்.
06:30 PM (IST) Aug 30
முகத்தில் கறை போல படிந்திருக்கும் மங்குவை போக்க உதவும் சில இயற்கை பொருட்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:08 PM (IST) Aug 30
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவில்லை. மாறாக அவரது குடும்பத்திற்காக முதலீடு செய்யவே வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
05:44 PM (IST) Aug 30
மூளையை உண்ணுகிற அமீபா நோயில் இருந்து தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என இங்கு காணலாம்.
04:48 PM (IST) Aug 30
பசும்பால் அல்லது எருமை பால் இந்த ரெண்டுல எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இங்கு பார்க்கலாம்.
04:46 PM (IST) Aug 30
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்தோ, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலோ யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
04:11 PM (IST) Aug 30
04:01 PM (IST) Aug 30
மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி உள்ள லோகா அத்தியாயம்1 சந்திரா திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
03:37 PM (IST) Aug 30
தமிழகத்தில் அடுத்த வாரம் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
03:36 PM (IST) Aug 30
நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி, அல்லு கனகரத்னம், 94 வயதில் ஹைதராபாத்தில் காலமானார். உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
03:36 PM (IST) Aug 30
தமிழத்தைச் சேர்ந்த ஜிகே மூப்பனார் பிரதமராவதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள் இன்று தமிழர், தமிழ் என்று பேசுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
03:35 PM (IST) Aug 30
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா செல்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
03:17 PM (IST) Aug 30
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
02:40 PM (IST) Aug 30
74 வயதான மனியம்மா, துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இயக்கி உலகை வியக்க வைத்துள்ளார். 11 வகையான வாகனங்களை ஓட்டும் உரிமம் பெற்று, டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.
02:37 PM (IST) Aug 30
மாதுளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சில உடல் நலப் பிரச்சினை உள்ளவர்கள் அதை சாப்பிட கூடாதாம். அப்படி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
02:13 PM (IST) Aug 30
சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவல்லிகேணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
02:11 PM (IST) Aug 30
கோலிவுட்டில் பேச்சிலர் நடிகராக வலம் வரும் சிம்பு, இதுவரை சந்தித்த காதல் சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:41 PM (IST) Aug 30
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண்கள் இனி ஏல முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். வாகன உரிமையாளர்கள் Parivahan இணையதளத்தில் பதிவு செய்து ஏலத்தில் பங்கேற்கலாம். பேன்சி எண்களுக்கான அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
01:10 PM (IST) Aug 30
தலையணையை எப்போது, எதற்காக மாற்ற வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
12:58 PM (IST) Aug 30
12:58 PM (IST) Aug 30
சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல். இவர் இன்று காலமானார்.
12:44 PM (IST) Aug 30
12:17 PM (IST) Aug 30
தமிழ்நாட்டில் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
11:58 AM (IST) Aug 30
டிஆர்பியில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாதனையை சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.
11:57 AM (IST) Aug 30
11:35 AM (IST) Aug 30
நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினலா? போலியா?. வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
11:16 AM (IST) Aug 30
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் தந்தை, விங் கமாண்டர் சந்திரசேகர் காலமானார்.
11:07 AM (IST) Aug 30
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கண்விழித்த நிலையில், அவரை கொலை செய்ய ஒரு கும்பல் வந்துள்ளது. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
10:48 AM (IST) Aug 30
10:37 AM (IST) Aug 30
திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு 25,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.
10:33 AM (IST) Aug 30
செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை இரவு அரிய ராகு கிரஸ்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது கும்ப ராசியில் நிகழும். இதனால் சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். எந்தெந்த ராசிகள் பாதிக்கப்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.
10:15 AM (IST) Aug 30
2025-26 கல்வியாண்டில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10:02 AM (IST) Aug 30
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன் என்பதை நடிகர் சத்யராஜ் கூறி உள்ளார்.