- Home
- Cinema
- ரஜினிக்கு நிகராக சம்பளம் கொடுத்தும் சிவாஜி படத்தை ரிஜெக்ட் பண்ணியது ஏன்? பல வருட சீக்ரெட்டை உடைத்த சத்யராஜ்
ரஜினிக்கு நிகராக சம்பளம் கொடுத்தும் சிவாஜி படத்தை ரிஜெக்ட் பண்ணியது ஏன்? பல வருட சீக்ரெட்டை உடைத்த சத்யராஜ்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன் என்பதை நடிகர் சத்யராஜ் கூறி உள்ளார்.

Sathyaraj Rejected Shivaji Movie
தென்னிந்திய ரசிகர்களின் விருப்பமான நடிகர்களில் ஒருவரான சத்யராஜ், வில்லன் மற்றும் நாயகன் வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினிகாந்தின் நண்பனாக அப்படத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். அவரின் கதாபாத்திரத்தை வைத்து தான் படத்தின் கதையே இருந்தது. தன் நண்பனை கொன்றவனை தேடிக் கண்டுபிடித்து ரஜினி பழிவாங்குவது தான் கூலி படத்தின் ஒன் லைன்.
சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?
கூலி படத்தின் மூலம் ரஜினியும், சத்யராஜும் 37 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்தனர். இடையே ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யாராஜுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வேடத்தை ஏற்க மறுத்துவிட்டார் சத்யராஜ். அதற்கான காரணத்தை சமீபத்தில் அவர் விளக்கினார். அப்போது தனது நாயக பிம்பத்தை மீட்டெடுக்க முயன்றதால், வில்லன் வேடத்தில் நடித்தால் ஒரே மாதிரியான வேடங்களில் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் அந்த வாய்ப்பை மறுத்ததாகக் கூறினார்.
ஹீரோவுக்கு முன்னுரிமை தந்த சத்யராஜ்
இதுபற்றி அவர் கூறியதாவது : "அந்த சமயத்தில், என் நாயக பிம்பத்தை மீட்டெடுக்க முயன்று கொண்டிருந்தேன். என் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டியிருந்தது. ஷங்கர் என்னை அழைத்தும் நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. சிவாஜியில் வில்லனாக நடிக்கத்தான் சங்கர் என்னை அணுகினார். அப்போது என் நிலைமை மோசமாக இருந்தது. நான் நாயகனாக நடித்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்தன. என்னுடைய திரைவாழ்க்கை ஆட்டங்கண்டிருந்த நேரத்தில், ரஜினியின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது.
பான் இந்தியா அளவில் பிரபலமான சத்யராஜ்
அதை ஏற்க மறுத்ததற்கான காரணத்தை ஷங்கரிடம் கூறினேன். என் படங்கள் வெற்றி பெறவில்லை. நாயகனாக நடித்த படங்கள்தான் அவை. ரஜினியின் படத்தில் வில்லனாக நடித்தால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், வில்லன் வேடங்களில் மாட்டிக்கொள்வேன்" என்றார் சத்யராஜ். பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார் சத்யராஜ். அப்படம் மூலம் அவருக்கும் பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவிந்தன.