நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினலா? போலியா?. வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குங்குமப்பூ விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் மிகவும் அரிதாகவே கிடைத்த இது தற்போது எல்லா மளிகை கடைகளிலும் கூட கிடைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. காரணம் கலப்படம் தான். ஆமாங்க, போலியான குங்குமப்பூ சாயமேற்றி கடைகளில் விற்கப்படுகிறது. அது தெரியாமலேயே நாமும் வாங்கி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் கொடுத்து வருகிறோம். மேலும் குங்குமப்பூவில் சேர்க்கப்படும் சாயம் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே ஆபத்தை விளைவிக்கும்.
பொதுவாக பொருளின் தரத்திற்கு ஏற்ப தான் அதன் விலையும் உயர்வாக இருக்கும். ஆனால் நீங்கள் சிறு கடைகளில் விற்கப்படும் குங்குமப்பூவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கினால் அது 70% இருக்குமேல் கலப்படம் தான் கலந்திருகும் தெரியுமா? சரி அப்ப போலியான குங்கும பூவை கண்டுபிடிப்பது எப்படி என்று நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. வாங்க தெரிஞ்சுக்கலாம்.
குங்குமப்பூவில் கலப்படம் எப்படி செய்யப்படுகிறது?
குங்குமப்பூவில் நிறைய விதங்களில் கலப்படம் சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அவற்றில் சிலவை இதோ,
- குங்குமப்பூ மகரந்தம் என்பதால் பார்ப்பதற்கு போலியாக அல்லாமல் ஒரிஜினல் போல் இருக்க வேண்டும் என்பதற்காக செவ்வந்தி போன்ற சில மகரந்த பூக்களை அதனுடன் கலக்கிறார்கள்.
- அதுபோல நிறத்திற்காகவும், அதுவும் கொழுப்பில் கரையக்கூடியதாக சில டை வகைகளும் சேர்க்கப்படுகின்றது.
- மாதுளை பீட்ரூட் போன்ற சில நார் பொருட்களும் சேர்க்கப்படுகின்றது.
- தேன், கிளிசரின், ரசாயன உப்புக்களும் சேர்க்கப்படுகின்றது
போலியான குங்கும பூவை கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் ஊற்றி அதில் நீங்கள் வாங்கி வந்த குங்கும பூவை போட்டு எந்த அளவுக்கு கலராக மாறுகிறது என்று பார்க்கவும். மேலும் குங்கும பூவின் இதழ்கள் தண்ணீருக்குள் இறங்குகிறதா? அல்லது மிதக்கிறதா? என்பதையும் கவனிக்கவும். குங்குமப்பூ கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் உள்ளே இறங்கினால் அது போலியானது என்று அர்த்தம். அதன் நிறங்களும் இதழிலிருந்து ரிலீஸ் ஆகும்.
ஒரிஜினல் குங்குமப்பூ அதில் உள்ள கலரை மெல்லமாக தான் ரிலீஸ் செய்யும். முக்கியமாக ஒரிஜினல் குங்குமப்பூ இதழ்கள் தண்ணீருக்குள் ஒருபோதும் மூழ்காது. மிதக்க தான் செய்யும்.
எனவே, இந்த முறையை பின்பற்றி நீங்கள் வாங்கியிருக்கும் குங்குமப்பூ ஒரிஜினலா அல்லது போலியா என்று சுலபமாக கண்டுபிடித்து விடலாம். இதை வைத்து நீங்கள் அடுத்த முறை குங்குமப்பூவை வாங்கும் முன் அதன் இதழை பார்த்தே கண்டுப்பிடித்துவிடலாம்.
