Saffron Water: குங்குமப்பூ தண்ணீரை குடிச்சிப் பாருங்க: ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!
ஒரு பூவினுடைய மகரந்தங்கள் சேமிக்கபட்டு, அதனை உலர்த்துவதன் மூலம் நமக்கு கிடைப்பது தான் குங்குமப்பூ. குங்குமப்பூவில் அதிகளவில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளது. இது நம் உடலில் வெப்பத்தை சீராகவைத்திருக்க உதவும். குங்குமப்பூவை மிகக் குறைந்த அளவில் எடுத்து, தண்ணரில் கலந்து குடித்தால் பல்வேறு மருத்துவப் பலன்களைப் பெற முடியும்.
சரும பாதுகாப்பு
தண்ணீர் அதிகளவில் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதே தண்ணீரில் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து குடித்து வந்தால், குங்குமப்பூவில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடண்ட்டுகள் சருமத்தில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும். மேலும், அவை உருவாகாமலும் பார்த்துக் கொள்ளும். சரும பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது குங்குமப்பூ. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செல்களில் இருந்து சருமத்திற்கு புத்துணர்வை அளிக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய சருமத்தில் பொலிவையும், இளமையையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
மாதவிடாய் வலியை குறைக்க
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியைக் குறைப்பதற்கு குங்குமப்பூ உதவிகரமாக இருக்கும். மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, குங்குமப்பூவை தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டும். இப்படிச் செய்வதால், மாதவிடாய் சுழற்சி நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சரி செய்யும்.
உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைப்பதில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளுக்கு தனியிடம் உண்டு. நம் உடலில் உற்பத்தியாகும் கார்டிசோல் உற்பத்தியை குறைத்து, செல்களுக்கு புத்திணர்ச்சியை அளிக்கிறது. இதனால், நமக்கு மன அழுத்தம் குறையும். மேலும், இதில் உள்ள சில ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், பசியையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் மெட்டபாலிசத்தை, குங்குமப்பூ சீராக வைத்திருக்கச் செய்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
Saffron Benefits : சிவப்பு தங்கம் ''குங்கும்ப்பூ''-வின் நன்மைகள் Vs தீமைகள்!
saffron
குங்குமப்பூவை அதிக நன்மை தரக்கூடியது. ஆனால், இதனை அதிகளவில் சாப்பிடக் கூடாது. ஆகவே, ஒன்று முதல் அதிகபட்சமாக மூன்று குங்குமப்பூ இதழ்களை ஒரு அரை லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவே போட்டு மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் குங்குமப்பூ தண்ணீரை குடிக்க வேண்டும்.