சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் 25ஆயிரம் பேருக்கு வேலை.! கொத்தாக வந்த அசத்தல் அறிவிப்பு
திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு 25,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு
இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதி அடையக்கூடாது என்பதற்காக வேலைவாய்ப்புகளை அரசானது ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு துறைகளில் மட்டுமல்ல தனியார் துறைகள் மூலமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு தமிழகத்தில் தொழில் தொடங்க தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வார இறுதி நாட்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்
அந்த வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்துகிறது.
நாள் : 31.08.2025
நேரம் : காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை
இடம் : ஜமால் முகமது கல்லூரி, TVS டோல்கேட், திருச்சி-20
சிறப்பு அம்சங்கள்
150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள்.
10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பதிவு.
அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவு
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
வயது வரம்பு:
18-35 வயதிற்குட்பட்டோர் முகாமில் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதிகள்
8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, செவிலியர், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் படிப்புகள்
திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்
இதே போல திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்துகிறது.
நாள் : 30.08.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை
இடம் :அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி
சிறப்பு அம்சங்கள்
* 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வாட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு.
கல்வித்தகுதிகள்
8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ /டிப்ளமோ / பார்மஸி /நர்சிங்/பொறியியல்
செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்
இதே போல தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டில் இன்று நடைபெறுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாள் : 30.08.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி - மதியம் 3.00 மணி
8 இடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதி,பெரும்பாக்கம் தாம்பரம் தாலுக்கா.
முக்கிய அம்சங்கள்:
முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் & திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்பு
5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு B.E., ITI, டிப்ளமோ வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம்
மாற்றுத்திறனாளிகள் கூட பங்கேற்கலாம்
வயது வரம்பு: 18 - 40 வயது