- Home
- Tamil Nadu News
- ராமதாஸ்- சுசீலா திருமணத்திற்கு தாலி வாங்கிக் கொடுத்தது யார் தெரியுமா? வன்னியர் சங்கத் தலைவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்
ராமதாஸ்- சுசீலா திருமணத்திற்கு தாலி வாங்கிக் கொடுத்தது யார் தெரியுமா? வன்னியர் சங்கத் தலைவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்
பாமக நிறுவனர் ராமதாஸின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நர்ஸாக இருந்த சுசிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், இத்திருமணத்திற்கு ஏகே மூர்த்தி சாட்சி எனவும் கூறப்படுகிறது.

தந்தை மகன் மோதல்
பாமகவில் தந்தை மகனான ராமதாஸ்- அன்புமணி இடையே மோதலானது உச்சகட்டத்தை தொட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வரும் நிலையில் பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் எந்த பக்கம் செல்வது என குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் இரு தரப்பும் பாமக எங்களுக்கு தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. தனித்தனியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி தங்களது செல்வாக்கை காட்டி வருகின்றனர். இதனால் பாமகவினர் தவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி பாமகவினரை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ராமதாஸ்க்கு இரண்டு மனைவியா.?
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ச. இராமதாஸ் சரஸ்வதி அம்மையாரை 1965 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் 24, 2025 அன்று 60வது திருமண நாளை தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடினர். இந்த நிகழ்வின் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் பரவிய நிலையில்,
கடந்த வாரம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சுசிலா என்ற பெண்ணோடு தனது 50வது திருமண நாளை கொண்டாடியுள்ளார் ராமதாஸ், ராமதாசுக்கு இரண்டாவது மனைவி உள்ளதா.? என பலரும் புருவத்தை உயர்த்த தொடங்கியுள்ளார். திண்டிவனம் நகரத்திற்குள் ராமதாஸ் சிறிய கிளினிக் வைத்திருந்தபோது இவர் சுசீலா நர்சாக 50 வருடங்களுக்கு முன்பே வந்து சேர்ந்தார். அப்போது முதல் ராமதாஸ் அந்த பெண்ணுடன் தொடர்பில் உள்ளார்.
ராமதாஸ் திருமணம்- சிஎன் ராமமூர்த்தி பரபரப்பு தகவல்
சுசிலாவுடன் ராமதாஸ் உறவிலிருந்து அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அனைவருக்கும் தெரியும் வகையில் சுசிலா தனது இரண்டாவது மனைவி என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ராமதாஸ். இதற்கிடையே வன்னியர் சங்க தலைவர்களில் ஒருவராக இருந்தவரும்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவரான சிஎன் ராமமூர்த்தி யூடியூர் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சென்னையில் கவுன்சிலர் மற்றும் மண்டல குழு தலைவராக ஜெயராமன் என்பவர் இருந்தார். அவரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.கே மூர்த்தி தான், சுசீலாவை கூட்டி வந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார். 5 இடங்களில் வீடு வாங்கி கொடுத்தார்.
திருமணத்திற்கு தாலி வாங்கி கொடுத்தது யார்.?
இதையெல்லாம் செய்து விட்டு தற்போது ஏகே மூர்த்தி அன்புமணியோடு சுற்றிக்கொண்டுள்ளார் என தெரிவித்ததாக கூறினார். மேலும் உடம்பு சரியில்லாத போது உடல்நிலையை பார்த்து கொண்டவர் சுசீலா எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சிஎன் ராமமூர்த்தி, ராமதாசுக்கு உடல் நிலை சரியில்லாத போது ராமதாஸை இரண்டு கையால் சுசீலா வீட்டிற்கு ஏகே மூர்த்தி தூக்கி சென்றதாகவும்,
ராமதாஸ் - சுசீலாவிற்கு திருமணம் நடைபெற்றதாகவும் இந்த திருமணத்திற்கு தாலி வாங்கி வந்தவர் ஏகே மூர்த்தி என கூறினார். எனவே ராமதாஸ்- சுசீலா திருமணத்திற்கு ஏகே. மூர்த்தி தான் சாட்சி என ராமமூர்த்தி என அடித்து கூறினார்.