சுசீலாவிற்காக பெற்ற மகனை தூக்கி எறிந்த டாக்டர் ராமதாஸ்..! நாடகக் காதலா?
டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதலுக்குப் பின்னணியில் ராமதாஸின் இரண்டாவது மனைவி சுசீலா இருப்பது தெரியவந்துள்ளது. சொத்து, அதிகாரம், கட்சியில் பதவி போன்றவற்றை சுசிலா கேட்டதால் இந்த மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது மனைவிக்காக உயிருக்கு உயிரான பெற்ற மகனையே தூக்கி எறிந்த டாக்டர் ராமதாஸின் செயலால் பாமக தொண்டர்கள் மற்றும் அரசிய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி- ராமதாஸ் மோதல் முதல் முதலில் வெளிவந்த போது இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தனுக்கு கொடுத்தது தான் காரணம் என பாமகவினர் மட்டுமல்ல அனைவரும் நம்பி கொண்டிருந்தனர்.
அந்த பொதுக்குழு கூட்டத்திலும் அதனை தொடர்ந்தும் சில மோதல்கள், நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு என இருவருக்கும் ஆதரவாகவே இருந்து வந்தார் முகுந்தன். மேலும் மாமாவிற்காக பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார் என கூறி ராஜினாமா செய்தார் முகுந்தன்.
அதேநேரம் அன்புமணிக்கு போட்டியாக தனது மகளான கவிதாவை அரசியல் மேடைகளில் ஏற்றி வந்தார் ராமதாஸ், இதனால் ராமதாஸின் மகளான கவிதாவிற்கும்- மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ராமதாஸ் நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது எந்தவித மோதலும் இல்லையென அடித்து கூறினார்கள். அன்புமணியும் அவரது அக்காவான கவிதாவும் சம்பந்தியாவார்கள், முகுந்தனின் தம்பி தான் அன்புமணியின் மருமகனாவர்,
இந்த நிலையில் ஏன் தந்தை - மகன் இடையே மோதல் ஏற்பட்டது என பாமகவினருக்கு மட்டுமில்ல அரசியல் விமர்சகர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது. அன்புமணி- ராமதாஸ் இடையிலான மோதல் நடிப்பாக இருக்குமோ என நினைத்த போது தான் உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக சுசீலா இருப்பது தற்போது வெளிப்படையாக வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாசின் இரண்டாவது மனைவி சுசீலா விவகாரம் தொடர்பாக யூடியூப்பில் வன்னியர் சங்க தலைவர்களில் ஒருவராக இருந்த சிஎன் ராமமூர்த்தி, ராமதாஸ் கட்சியில் பணியாற்றி வந்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன்பே பேசினர்.
ஆனால் வழக்கம் போல் யூடியூப்பில் சொல்லப்படும் கட்டுக்கதை என அனைவரும் ராமதாஸ் மீதான நம்பிக்கையால் இந்த தகவலை புறக்கணித்தனர். இந்த சூழ்நிலையில் தான் தற்போது சொத்தில் பங்கு, அதிகாரம், கட்சியில் பதவி போன்றவை சுசிலா கேட்டதால் நாளுக்கு நாள் விரிசல் அடைந்து தற்போது ராமதாஸ்- அன்புமணிக்கு மோதலுக்கு இது தான் காரணம் என வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
எனவே ராமதாஸ்- அன்புமணிக்கு இடையிலான மோதலுக்கு காரணம் முகுந்தன் காரணம் இல்லையென சினிமாவில் வரும் ட்டுவிட்ஸ் போல் பின்னனியில் சுசிலா இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே ராமதாஸ்- அன்புமணி இடையிலான மோதல் நாடகம் இல்லை, உண்மையான மோதல் என உறுதியாகியுள்ளது. இரண்டாவது மனைவிக்காக பெற்ற மகனையே ராமதாஸ் தூக்கி எறிந்த உண்மை அம்பலமாகியுள்ளது.