3 பேர் காதல்..! இணையத்தை திணறடிக்கும் மாலை போட்ட படங்கள்
விஷாலின் நிச்சயதார்த்தம் முதல் ராமதாஸின் இரண்டாவது மனைவி வரை, தமிழக சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் திருமணம் தொடர்பான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார் ஆகியவை இதில் அடங்கும்.

தமிழக சினிமா வட்டாரத்தை மட்டுமல்ல அரசியல் களத்திலும் பல்வேறு புயல்களை உருவாக்கியுள்ளது திருமணம் தொடர்பாக சம்பவங்கள். அந்த வகையில் நடிகர் விஷால், மாதம்பட்டி ரங்கராஜ், பாமக நிறுவனர் ராமதாஸ் ரகசியம் காத்த இரண்டாவது மனைவி போன்ற தகவல்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஷால் செல்லமே, சண்டை கோழி போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் நெருக்கமான உறவு இருந்ததாக 2010களில் வதந்திகள் பரவின. அடுத்ததாக விஷாலின் படம் 'மார்க் ஆன்டனி'யில் நடித்த அபினயா உடன் அவருக்கு காதல் உறவு இருப்பதாக வதந்திகள் பரவின. அடுத்தாக விஷாலின் 'பாண்டிய நாடு படத்தில் நடித்த லக்ஷ்மி மேனன் உடன் அவருக்கு உறவு இருப்பதாக வதந்திகள். இது போன்ற பல தகவல்கள் பரவிய நிலையில் அனீஷா அல்லா ரெட்டியுடன் 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தெலுங்கு நடிகையான அனீஷா அல்லா ரெட்டிவுடன் விஷால் அவரது நிச்சயதார்த்தத்தை நடைபெற்றதாக கடந்த 2019ஆம் ஆண்டு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தார். ஹைதராபாதில் உள்ள பிளஷ் ஹோட்டலில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் அக்டோபரில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென நிறுத்தப்பட்டது. காரணம் உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது நடிகை சாய் தனுஷிகா உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 'யோகி டா' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தங்கள் காதலை இருவரும் அறிவித்தனர். இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ், தந்தையின் சமையல் தொழிலைத் தொடர்ந்து, பிரபலங்களின் வீட்டு விழாக்கள், திருமணங்கள், பட வெற்றி விழாக்களுக்கு கேட்டரிங் சேவை செய்பவர். மெஹந்தி சர்க்கஸ்' (2019), 'பென்குயின்' (2020) போன்ற படங்களில் நடித்து, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தான் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த ஜூலை மாதம் சமூகவலைதளத்தில் ரங்கராஜூடன் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடுத்ததாகதான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அடுத்த அதிர்ச்சியை உருவாக்கினார். இந்த பரபரப்பான நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜாய் கிரிஸில்டா.
தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்ததாகக் கூறி, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது 6-7 மாத கர்ப்பமான தான், அந்தக் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என்றும், அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். "என் கணவர் ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் அப்பா. எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்" என்று கூறினார்.
அடுத்ததாக பாமக நிறுவனர் ராமதாசின் 50வது திருமண நாள் கொண்டாட்டம் தான் அரசியல் வட்டாரத்தையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் டாக்டர். ச. இராமதாஸ் சரஸ்வதி அம்மையாரை 1965 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் 24, 2025 அன்று அறுபதாவது (60வது) திருமண நாளை தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடினர்.
இராமதாஸ் மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: மூத்த மகள் ஸ்ரீகாந்தி, இளைய மகள் கவிதா, மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சுசிலாவுடன் தனது 50வது திருமண நாளை கொண்டாடியுள்ளார் ராமதாஸ், ராமதாசுக்கு இரண்டாவது மனைவி உள்ளார்களா என பலரும் புருவத்தை உயர்த்த தொடங்கியுள்ளார்.
50 ஆண்டு கால ரகசியத்தை உடைத்துள்ளார் ராமதாஸ், இந்த நிலையில் யார் இந்த சுசிலா என்ற கேள்வியானது எழுந்துள்ளது. திண்டிவனம் நகரத்திற்குள் ராமதாஸ் சிறிய கிளினிக் வைத்திருந்தபோது இவர் சுசிலா நர்சாக 50 வருடங்களுக்கு முன்பே வந்து சேர்ந்தார். சுசிலாவுடன் ராமதாஸ் உறவிலிருந்து அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள்ள உள்ள ஒற்றுமையால் இந்த விஷயம் வெளியே கசியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சுசிலா தனது இரண்டாவது மனைவி என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ராமதாஸ்.