- Home
- Cinema
- முடிஞ்ச்ச்... வெளிவந்தது மாதம்பட்டி ரங்கராஜன் கோரமுகம்.. தலையில் அடித்து கதறும் ஜாய் கிறிஸ்டில்லா
முடிஞ்ச்ச்... வெளிவந்தது மாதம்பட்டி ரங்கராஜன் கோரமுகம்.. தலையில் அடித்து கதறும் ஜாய் கிறிஸ்டில்லா
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ரங்கராஜ் தான் தந்தை என்றும் தெரிவித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமண சர்ச்சை
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் கலைஞராகவும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார்.பல்வேறு திரைப்படத்தில் நடித்தும் உள்ளார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளங்களில் கடந்த ஜூலை மாதத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் ரங்கராஜுடன் திருமணம் செய்ததாகவும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே முதல் மனைவி ஸ்ருதி இருக்கும் நிலையில் மற்றொரு பெண்ணோடு ஒன்றாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா
இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை பகிர்ந்து "Mr & Mrs Rangaraj" என்று குறிப்பிட்டார். அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, "Baby loading 2025" என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில்.
இதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் மாதம்பட்டி ரங்கராஜ் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஸல்டா புகார் அளித்துள்ளார்.
என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார்.
கருவை கலைக்க கூறி மிரட்டல்
இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.