அப்பாடா... புரட்சி தளபதிக்கு ஒருவழியா நிச்சயதார்த்தம் நடந்தாச்சு
நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளில் நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 15 ஆண்டுகால நட்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிய உள்ளது.

நடிகர் விஷால் கிருஷ்ண ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமானவர், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணியை முடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக இருந்தார். இதனையடுத்து சுமார் கட்டுமான பணி 9 ஆண்டுகள் இழுத்தடிந்தது.
தற்போது கட்டிடத்தில் 95 % பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விஷாலின் திருமணம் பற்றி பேசத் தொடங்கினார். முன்னதாக பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டு வந்தது. குறிப்பாக வரலட்சுமி சரத்குமார், அபினயா, லட்சுமி மேனன் போன்றோருடன் வதந்திகள் வந்தன, ஆனால் அவை உண்மையாக இல்லை.
2019ஆம் ஆண்டில் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திடீரென ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த மே மாதம் தன்ஷிகாவின் யோகி டா படத்தின் டிரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சியில், விஷால் மற்றும் தன்ஷிகா தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இன்று தனது 48வது பிறந்தநாளன்று நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் இல்லத்தில், பெற்றோர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.
இது அவர்களின் 15 ஆண்டுகள் நீடித்த நட்பிலிருந்து உருவான காதல் உறவின் அடுத்த படியாகும். பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது விஷாலின் பிறந்தநாள் என்பதால், சிறப்பான தினமாக அமைந்தது.
இது தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த எனது நிச்சயதார்த்தம் தொடர்பான நல்ல செய்தியை எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் சாய் தன்ஷிகாவுடன் உடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார். இந்த நேரத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்ல உணர்வுகளையும் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.