- Home
- Cinema
- அதிர்ச்சி...மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்.! போலீசில் கதறும் ஜாய் கிரிசில்டா
அதிர்ச்சி...மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்.! போலீசில் கதறும் ஜாய் கிரிசில்டா
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவுடன் இரண்டாம் திருமணம் செய்ததாகவும், ஜாய் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நடுவராகவும், பிரபல சமையல் கலைஞராகவும் உள்ளார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையே கடந்த ஜூலை மாதத்தில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளங்களில் ரங்கராஜுடன் திருமணம் செய்ததாகவும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஏற்கனவே முதல் மனைவி ஸ்ருதி இருக்கும் நிலையில் மற்றொரு பெண்ணோடு ஒன்றாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக கடந்த ஜூலை 26ஆம் தேதி ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில் கோயிலில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை பகிர்ந்து "Mr & Mrs Rangaraj" என்று குறிப்பிட்டார். அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, "Baby loading 2025" என்று அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்தார்.
அதே நேரத்தில் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் இன்னும் "Madhampatty Rangaraj’s wife" என்று பயோவை மாற்றாமல் அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியோடு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில். ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்,தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.