Karthik waiting for Naveen at Judge House : துர்காவிற்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நவீனை ஜாமினில் எடுக்க கார்த்திக் போராடிக் கொண்டிருக்கிறார்.

Karthik waiting for Naveen at Judge House : கார்த்திகை தீபம் 2 சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. துர்காவிற்கு முகூர்த்த புடவை எடுக்க குடும்பத்தினர் அனைவரு ஷாப்பிங் சென்றனர். ஆனால், துர்காவின் திருமணம் நடக்க நவீனை போலிசிடம் பிடித்துக் கொடுக்க சந்திரகலா திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர ஒரு நாடகமாடி போலிசிலும் புகார் கொடுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் நவீனை ஒரு பக்கம் தேட, சந்திரகலாவும் ஒரு பக்கம் தேடி வந்தார்.

இந்த நிலையில் தான் கார்த்திக் தனது வீட்டிலேயே நவீனை மறைத்து வைத்தார். இது தெரிந்த துர்கா, நவீனை துணிக்கடைக்கு வரச் சொல்ல அவரும் மாறுவேடத்தில் துணிக்கடைக்கு வந்துள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட சந்திரகலா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசும் துணிக்கடைக்கு வந்துவிட்டனர். அப்போது ஒன்றும் புரியாமல் திகைத்த கார்த்திக்கிற்கு துர்கா ஷாக் கொடுக்கும் வகையில் நான் தான் நவீனை இங்கு வர சொன்னேன். அவரும் இங்கு தான் இருக்கிறார். நீங்கள் தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்று துர்கா கூறுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நவீனையும் திட்டி தீர்த்தார். இதைத் தொடர்ந்து நவீனை கார்த்திக் அட்ட பாக்ஸில் மறைத்து வைக்கிறார். பின்னர் அந்த அட்ட பாக்சை போலீசார் பரிசோதிக்கின்றனர். ஆனால், அதில் நவீன் இல்லை. அவர் துர்கா அறையில் மறைத்து வைக்கப்பட்டார்.

சிவனாண்டியும் சந்திரகலாவும் எப்படியாவது இந்த நவீனை மாட்டி விட வேண்டும் என திட்டமிடுகின்றனர். அடுத்து நவீனை துர்காவின் ரூமில் தங்க வைக்கிறார் கார்த்திக். அப்போது நவீனை பார்த்த சந்திரகலா போலீசில் மாட்டிவிட அவரும் கைது செய்யப்படுகிறார். இந்த நிலையில் தான் குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்துக்கு திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில் கார்த்திக் மட்டும் நவீனை காப்பாற்ற நீதிபதீ வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், கோர்ட் லீவு. அதனால் வழக்கறிஞருடன் நீதிபதி வீட்டிற்கு வந்த கார்த்திக் அங்கு நீதிபதிக்காக காத்துக்கொடிருக்கிறார். அடுத்த நாள் விடிந்தால் கல்யாணம், இந்த சூழலில் நவீன் ஜாமீனில் வெளியில் வருவாரா? நவீன் துர்கா திருமணம் நடைபெறுமா என்பது பற்றி பார்க்கலாம்.