- Home
- Cinema
- ஓவர் ஆட்டம் ஆடிய மாதம்பட்டி ரங்கராஜ்..! வசதி வர வர பணிவு வேண்டும்.. இன்னும் புகார்கள் வர வாய்ப்பு!
ஓவர் ஆட்டம் ஆடிய மாதம்பட்டி ரங்கராஜ்..! வசதி வர வர பணிவு வேண்டும்.. இன்னும் புகார்கள் வர வாய்ப்பு!
தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ள மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு என்ன? அவரது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து விரிவாக பார்ப்போம்.

Madhampatty Rangaraj: Controversy & Net Worth
ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வசதி வரும்போது பணிவு வர வேண்டும். இல்லாவிடில் வசதி இருந்தாலும் மரியாதை, பெயர் புகழ் எல்லாம் போய் விடும். இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவரை பற்றி தமிழ்நாட்டில் தெரியாத ஆளே இருக்காது என்னும் அளவுக்கு தனது சமையல் கலை திறமையின் மூலம் புகழ்பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரை புகழின் உச்சாணியில் அமர்த்தியது சமையல் கலை தான்.
பெரும் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
தனது தொழில் திறமை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது நடத்தையின் மூலம் இப்போது சுக்குநூறாக நொறுங்கியுள்ளார். ஏற்கெனவே மனைவி, 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை அவர் 2வது திருமணம் செய்து கொண்டதும், இதில் ஜாய் கிரிசில்டா கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தியும் மக்கள் மத்தியில் அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட கேட்டரிங் நிறுவனம்
இதுமட்டுமின்றி மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டு சேர்ந்து வாழ மறுப்பதாக ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது மாதம்பட்டிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் ஒரு சமையல்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய மாதம்பட்டி ரங்கராஜ், இப்போது 1000 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஒரு பிரம்மாண்ட கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோடிக்கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்தில் ஆர்டர் பெற முடியும்.
தனி ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு வளர்ச்சி
பெரிய பெரிய செல்வந்தர்கள், பிரபலங்கள் ஆர்டர் கொடுப்பதால் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு ஆர்டருக்கு ரூ.3 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அவரது கேட்டரிங் உணவின் சுவை அந்த அளவுக்கு நன்றாக இல்லை என அதனை சாப்பிட்டவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சினிமாவில், அரசியல் இருப்பவர்கள் அனைவரும் விஷேச நிகழ்ச்சிக்கு மாதம்பட்டியின் கேட்டரிங்கை தேடிச்சென்றதால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மலை போல் பணத்தை குவித்து விட்டார். தனி ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
ரூ.1200 கோடி சொத்து மதிப்பு?
மாதம்பட்டி ரங்காஜுக்கு ரூ.1200 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் சொத்துக்கள் இருப்பதாகவும், பல சொகுசு கார்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் கேட்டரிங் ஆர்டர் பெறும் மாதம்பட்டி ரங்கராஜ் சிங்கப்பூர் மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் இவர் பிரபலமான சமையல்காரர் ஆக திகழ்ந்து வருகிறார்.
வசதி இருந்தும் நடத்தை சரியில்லையே
இதுதவிர விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வருமானம், யூடியூப் வருமானம் என கோடி மேல் கோடி சேர்த்து வந்தார் மாதம்பட்டி ரங்காஜ். ஆனால் இப்போது இவை அனைத்தும் செல்லாக்காசு ஆகும்படியாக மாதம்பட்டி ரங்காஜின் நடத்தை அமைந்துள்ளது. ஜாய் கிரிசில்டா மட்டுமின்ற் இன்னும் பல பெண்களிடம் இருந்தும் மாதம்பட்டி ரங்காஜுக்கு எதிராக புகார்கள் வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நான் தொடக்கத்திலேயே கூறியபடி வசதி வர வர பணிவு வேண்டும். இல்லாவிடில் வசதி இருந்தும் நீங்கள் செல்லாக்காசு தான்.