Pomegranate : மாதுளையில் நன்மைகள் ஏராளம்! ஆனா 'இவங்க' சாப்பிடவே கூடாது
மாதுளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சில உடல் நலப் பிரச்சினை உள்ளவர்கள் அதை சாப்பிட கூடாதாம். அப்படி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Who Should Avoid Pomegranate
மாதுளை பழம் ஏராளமான சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் பழம் ஆகும். வைட்டமின் சி, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழமானது ஆப்பிளுக்கு அடுத்தபடியாக இருக்கிறது. இதில் இருக்கும் சத்துக்கள் இதய ஆரோக்கியம் முதல் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுவது வரை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும், அனமீயா பிரச்சனை வராமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறது. இதனால்தான் ஆப்பிளை போலவே தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இப்படி பல நன்மைகள் இதில் கொட்டி கிடந்தாலும் சில உடல் நல பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதுளை டேஞ்சர். அவர்கள் மருத்துவர் ஆலோசனையில்லாமல் மாதுளையை சாப்பிடவே கூடாதாம். அப்படி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அதற்கான காரணம் என்ன? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள்
இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கும் தன்மை மாதுளைக்கு உண்டு. ஆனாலும் இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மாதுளை சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
மாதுளையில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள்
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாதுளையானது கல்லீரலில் இயல்திறனை குறைக்கும் தன்மைக் கொண்டது.
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள்
மாதுளை பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது சிலருக்கு நார்ச்சத்து அதிகமாக எடுக்கும் போது டயரியா, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். குறிப்பாக அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
மாதுளை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் 2 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு மாதுளை பழத்தை ஒருபோதும் கொடுக்கவே கூடாது.
கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?
கர்ப்பிணிகள் மாதுளை பழம் சாப்பிடலாம். ஆனால் மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாதுளை பழத்தை ஜூஸாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
மாதுளை பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 1-2 நாட்கள் சாப்பிடலாம் அதுவும் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது.
அறுவை சிகிச்சை செய்தவர்கள்
நீங்கள் அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்கள் என்றால் இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதுபோல அறுவை சிகிச்சைக்கு பிறகும் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தான் மாதுளையை சாப்பிட வேண்டும்.