69 கோடி சம்பளம் அப்பு... அதானி குழும சிஇஓக்களின் சம்பளத்தை பாருங்க.. தலை சுற்றி விடும்
அதானி குழுமத்தின் 2025 ஆண்டு அறிக்கையின்படி, CEO-க்களின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் CEO வினய் பிரகாஷ், 69.34 கோடி ரூபாய் சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

உச்ச வளர்ச்சியில் அதானி
அதானி குரூப் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு கார்ப்பரேட் குழுமங்களில் ஒன்று. கௌதம் அதானி என்பவரால் தொடங்கப்பட்டது. அகமதாபாத் தலைமையகம் கொண்ட இந்தக் குழுமம், பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் 200 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருந்தது,
எரிசக்தி, துறைமுகம், சிமெண்ட், எரிவாயு, வேளாண்மை, பசுமை ஆற்றல் என விரிந்த வணிகங்களில் ஈடுபட்டு வரும் இந்த குழுமத்தின் ஆண்டு அறிக்கை 2025 வெளிவந்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக அடானி குழுமத்தின் CEO-க்கள் பெற்ற சம்பள விவரங்கள் அனைவரின் கவனம் பெற்றுள்ளது.
அதானி நிறுவன ஆண்டு அறிக்கை
அடானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் CEO வினய் பிரகாஷ், 69.34 கோடி ரூபாய் சம்பளம் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது சம்பளம் மற்ற CEO-க்கள் சம்பளத்தை விட பல மடங்கு மிகவும் அதிகமாகவுள்ளது.
அடுத்ததாக, அடானி எரிசக்தி சால்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கண்டார்ப் பட்டேல் சம்பளம் 14 கோடி ரூபாயாக உள்ளது. சிமெண்ட் துறையில் செயல்படும் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ACC Ltd நிறுவனத்தின் முன்னாள் CEO அஜய் கபூர் 11.45 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
அதானி நிறுவன சிஇஓ சம்பளம் என்ன.?
பசுமை ஆற்றல் துறையில் முன்னணி வகிக்கும் அடானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வினீத் எஸ். ஜெயின் 11.23 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார். அதேசமயம் துறைமுகம் மற்றும் SEZ துறையைச் சேர்ந்த அடானி போர்ட்ஸ் நிறுவனத்தின் அஷ்வானி குப்தாவின் சம்பளம் 10.34 கோடியாக உள்ளது.
அடானி பவர் நிறுவனத்தின் எஸ். பி. க்யாலியா 9.16 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். அடானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சுரேஷ் பி. மங்களானிக்கு 8.22 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
சிஇஓ சம்பளம் 69 கோடியா.?
வேளாண்மை துறையை சார்ந்த AWL Agri Business Ltd நிறுவனத்தின் அங்க்ஷு மாலிக் சம்பளமாக 5.9 கோடி ரூபாயும், ITD Cementation India Ltd நிறுவனத்தின் ஜயந்த பாசுவுக்கு 2.01 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அடானி குழுமம் CEO-க்களின் சம்பளம் என்பது வெறும் எண்ணிக்கைகள் மட்டுமல்ல, உலகளாவிய வணிகத் தளத்தில் இந்திய நிறுவனங்கள் எவ்வளவு வலிமையாக செயல்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது.