2025-26 கல்வியாண்டில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

யோகா - இயற்கை மருத்துவ எம்.டி. படிப்புக்கு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2025-2026-ம் கல்வியாண்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்புக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org.என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல்

தொகுப்பேட்டில் அறியலாம். விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும். விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

* படிப்புப் பிரிவு : எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டமேற்படிப்பு

* படிப்பிற்கான காலம் : 3 ஆண்டுகள்

* படிப்பிற்கான கல்வித்தகுதி : தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

* கல்லூரிகளின் விவரங்கள்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 12.09.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.

* அறிவிக்கை நாள் 31.08.2025

* தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் 31.08.2025 முதல்

* இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 31.08.2025 முதல்

* தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் 12.09.2025 மாலை 5.00 மணி வரை

* இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 12.09.2025 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர்

சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 12.09.2025 மாலை 5.00 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.