முகத்தில் கறை போல படிந்திருக்கும் மங்குவை போக்க உதவும் சில இயற்கை பொருட்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகம் மென்மையாகவும், க்ளீன் ஸ்கின்னாகவும் இருக்க வேண்டுமென்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். ஆனால், ஒருவரது முக அழகை கெடுக்கும்படி ஏராளமான சரும பிரச்சனைகள் வந்து விடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஹைப்பர் பிக்மென்டேஷன். இது சூரிய கதிர்வீச்சு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் சருமத்தில் ஏற்படுகின்றது. இது கருமை திட்டுக்கள் அல்லது மங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சரும பிரச்சனையானது ஒருவரது முக அழகை கடுப்பது மட்டுமில்லாமல் அவரது தன்னம்பிக்கையையும் இழக்க செய்யும்.
இந்த மங்கு பிரச்சினையை போக்க சிலர் கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்கிறார், ஆனால் சிலருக்கு நல்ல பலனை தந்தாலும் எல்லோருக்கும் அல்ல. மாறாக பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தலாம். ஆனால் ஹைபர் ஃபிக்மென்டேஷனை போக்க சில இயற்கை பொருட்கள் அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். அவை என்னென்ன.. அவற்றை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹைப்பர் பிக்மென்டேஷன் போக்க சில டிப்ஸ்கள் ;
1. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெலில் அலோவின் என்னும் பண்பு உள்ளது. இது சரும நிறமியை குறைக்க உதவுகிறது. எனவே இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி பின் மறுநாள் காலை சூடான நீரில் முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
2. பால்
பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சரும நிறமியை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு காய்ச்சாத பாலை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி இரண்டு முறை காலை முகத்தில் தடவி வந்தால் கருமை திட்டுகள் விரைவில் மறையும்.
3. எலுமிச்சை சாறு மற்றும் தேன்
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி கருமையான தட்டுகளை குறைக்க உதவி புரியும். இதற்கு எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் இருக்கும் கருமை திட்டுகள் மீது தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை போட்டு வரவும்.
4. வெங்காய சாறு
வெங்காய சாறில் இருக்கும் சல்ஃபர் கருமை திட்டுக்கள் போக்க உதவுகிறது. இதற்கு கருமை திட்டுகள் மீது வெங்காய சாறு தடவி 5 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு 3 முறை இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை முற்றிலும் நீங்கிவிடும்.
5. ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் இருக்கும் அசிட்டிக் அமிலம் சருமத்தில் உள்ள நிறமியை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகளுடன், 2 பங்கு தண்ணீரை கலந்து அதை கொண்டு கருமை திட்டுகள் மீது தடவி 1-2 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் போதும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
