மூளையை உண்ணுகிற அமீபா நோயில் இருந்து தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என இங்கு காணலாம்.

கடந்தாண்டு கேரளாவில் பீதியை கிளப்பிய 'மூளையைத் தின்னும் அமீபா' தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. மூளை திசுக்களைக் கொன்று மூளையில் வீக்கத்தை உண்டாக்கும் இந்தத் தொற்று வந்தால் 97 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளதாக கடந்தாண்டு பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.

மூளையை தின்னும் அமீபா நோய்

இந்த அரிதான மூளைக் காய்ச்சல், நிகேலெரியா பௌலெரி (Naegleria fowleri) என்ற ஒரு செல் உயிரியால் வருகிறது. சுத்தமில்லாத தேங்கி இருக்கும் தான் பெரும்பாலும் இருக்கும். ஏரி, குளம், குட்டை, நீச்சல் குளம், போர்வெல் ஆகிய நன்னீர் பகுதியில்தான் இருக்கும்.

இது மூக்கின் வழியே உடலுக்குள் நுழைந்து, அவ்வழியே மூளைக்கு சென்று முதன்மை அமோபிக் மெனிங்ஜின்செபிளிடிஸ் ( Primary Amoebic Meningoencephalitis) என்ற கொடிய நோயை ஏற்படுத்தும். இந்த நோய்த் தொற்று வந்ததும் 1 முதல் 12 நாள்களில் கடுமையான தலைவலியுடன் காய்ச்சல் வரும். பின் வாந்தி, மயக்கம் வந்து உடலையே புரட்டு போடும். தொடர்ச்சியாக கழுத்து இறுக்கம், மனச்சிதைவு ஏற்பட்டு, சில நாட்களில் கோமா, மரணம் வரை கொண்டுவிடும்.

எப்படி பரவுகிறது?

நன்னீர்நிலைகளில் குளிக்கும்போது பரவும். நீந்துதல் அல்லது குளித்தல் போன்ற நிகழ்வுகளில் மூக்கின் வழியே பரவும். அந்த தண்ணீரை குடிப்பதால் அல்ல மூக்கில் உறிவதால் தான் பரவும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது.

தடுக்க என்ன செய்யலாம்?

நாள்கணக்கில் தேங்காத சுத்தமான குளிர்ந்த நீரில் குளிக்கலாம். நன்கு சுத்தம் செய்து, அடிக்கடி தண்ணீரை மாற்றிய நீச்சல் குளங்களில் மட்டுமே குளிக்கவும். ஏரி, குளம் குட்டை ஆகியவற்றில் குளிப்பதை தவிர்க்கவும்.

மூக்கில் தண்ணீர் செல்லாதபடி நோஸ் கிளிப் அணிந்து குடிக்கலாம். இந்த நோய் அரிதாக வரும் என்பதால் ஒருமுறை வந்தாலே உயிரை பறிக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் போடவும். தொடர்ச்சியாக காய்ச்சல், தலைவலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளவும்.