- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கண்விழித்த ஈஸ்வரியை மர்டர் பண்ண வந்த கும்பல்; ஹீரோவாக வந்து காப்பாற்றுவாரா ஜீவானந்தம்? - எதிர்நீச்சல் தொடர்கிறது
கண்விழித்த ஈஸ்வரியை மர்டர் பண்ண வந்த கும்பல்; ஹீரோவாக வந்து காப்பாற்றுவாரா ஜீவானந்தம்? - எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கண்விழித்த நிலையில், அவரை கொலை செய்ய ஒரு கும்பல் வந்துள்ளது. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை தான் தாக்கிய வீடியோ ஆதாரம் அடங்கிய போனை கைப்பற்றிய ஆதி குணசேகரன். அந்த போனை தன்னுடைய அறையில் வைத்தது மட்டுமின்றி, அதை யாரும் எடுத்துவிடக் கூடாது என்பதால், வீட்டில் சிசிடிவி கேமரா மாட்டுவது மட்டுமின்றி, தன்னுடைய அறையிலும் ஒரு கேமராவை மாட்டச் சொல்கிறார். இதனால் ஆதி குணசேகரன் மீது ஜனனிக்கு மேலும் சந்தேகம் அதிகரிக்கிறது. அந்த போனில் ஏதோ இருக்கிறது. அதை யாரும் எடுத்துவிடக் கூடாது என்கிற பயத்தில் தான் ஆதி குணசேகரன் இதுபோன்ற வேலைகளை செய்வதாக சக்தியிடம் கூறுகிறார் ஜனனி.
ஈஸ்வரியை கொல்ல பிளான் போடும் கதிர்
அறிவுக்கரசி மற்றும் கதிரை அழைத்து பேசும் ஆதி குணசேகரன், தனக்குள் இருக்கும் பயத்தை பற்றி கூறுகிறார். நாளைக்கே ஈஸ்வரி எழுந்து வந்தால் தனக்கு எதிராக தான் சாட்சி சொல்வாள் என அவர்களிடம் புலம்பிவிட்டு செல்கிறார். இதையடுத்து தன் அண்ணனுக்காக இதை செய்வேன் என அறிவுக்கரசியிடம் கூறுகிறார் கதிர். அந்த ஈஸ்வரியால் தான் அண்ணனுக்கு பிரச்சனை என்றால் அவளை கொலை செய்யப்போகிறேன் என சொல்கிறார். இதைக்கேட்ட அறிவுக்கரசியும் ஷாக் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில், ஈஸ்வரி கண்விழிப்பது போல் காட்டுகிறார். ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது.
ஜனனிக்கு வரும் கெட்ட கனவு
ஈஸ்வரி கண்விழித்த நிலையில், அவரை கொல்ல முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஆஸ்பத்திரிக்கு வருகிறது. அந்த கும்பலை பார்த்ததும் கதவை மூடிக் கொள்கிறார் தர்ஷினி. ஆனால் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார்கள். ஈஸ்வரியை அவர்கள் கொல்ல வருவது போல் காட்டுகிறார்கள். ஆனால் இறுதியாக அது கனவு என தெரிய வருகிறது. ஜனனிக்கு தான் இதுபோன்ற கெட்ட கனவு வந்திருக்கிறது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார் ஜனனி. அங்கு ஈஸ்வரி சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருவதை பார்த்து கண்ணீர் சிந்துகிறார்.
மீண்டும் எண்ட்ரி கொடுப்பாரா ஜீவானந்தம்?
ஜனனி கனவில் வந்தது நினைவாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கதிரும், அறிவுக்கரசியும் சேர்ந்து ஈஸ்வரியை போட்டுத்தள்ள பிளான் போடும் நிலையில், அவர்கள் ஆஸ்பத்திரிக்கு ஆள் அனுப்பவும் வாய்ப்பு உள்ளது. மறுபுறம் வீட்டில் நடக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தி பார்கவியோடு, தர்ஷனை சேர்த்து வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார் ஜனனி. இதனால் ஜீவானந்தம் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதனால் அந்த சீரியலின் டிஆர்பியும் எகிற வாய்ப்பு உள்ளது.