இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், தங்கம் வெள்ளி புதிய உச்சம், சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

08:33 AM (IST) Jan 24
அய்யனார் துணை சீரியலில் நிலாவை வெறுப்பேற்றுவதற்காக, சோழன் தன்னுடைய போனில் அடுத்த கல்யாணத்துக்காக பொண்ணு தேடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:18 AM (IST) Jan 24
Rain: தமிழகத்தில் நிலவி வந்த கடும் பனிப்பொழிவு குறைந்து, தற்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
07:48 AM (IST) Jan 24
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை குறைந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.