- Home
- Politics
- அண்ணாமலைக்கு சீட் இல்லை... மோடி எடுத்த முக்கிய முடிவு..! பாஜகவின் இந்திய முகமாக மாறும் தமிழர்..!
அண்ணாமலைக்கு சீட் இல்லை... மோடி எடுத்த முக்கிய முடிவு..! பாஜகவின் இந்திய முகமாக மாறும் தமிழர்..!
அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்கின்றனர். அதற்கு பதிலாக, பொதுச் செயலாளர் போன்ற டெல்லி சார்ந்த பொறுப்புகளில் அவர் கவனம் செலுத்துவார். அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு ஆக்ரோஷமான தலைவராக நற்பெயரை வளர்த்துக் கொண்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, நிதின் நபின் ஐந்து மாநிலங்களில் தேர்தலுக்கான பணிகளில் களமிறங்கியுள்ளார். பாஜகவின் தேசிய அணி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலைக்கு இதில் முக்கிய பதவி கொடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்கிறார்கள்.
பாஜக தேசியத் தலைவராக நிதின் நவீனை நியமித்த பிறகு, கட்சி இப்போது ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அசாமில் பாஜக ஆட்சி அமைத்து இருந்தாலும், அங்கு அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறது. மேற்கு வங்காளத்தை வெல்வதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு, கேரளாவிற்கான வலுவான உத்தியை கட்சி வகுத்துள்ளது. இந்த மாநிலங்களுடன் புதுச்சேரியிலும் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்தி, திமுகவை பின்னுக்குத் தள்ள பாஜக முயற்சித்து வருகிறது.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையின் போது திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திமுகவை அட்டாக் செய்தார். இது தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக முழுமையாக தீவிரமாக உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதற்கெல்லாம் மத்தியில், அண்ணாமலையின் பங்கு குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபினை நியமிப்பதன் மூலம் பாஜக அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக இளைஞர்களை முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை புதிய பாஜக தலைவர் நிபின் பதவிக்கு அடுத்து, பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். அண்ணாமலைக்கு பெரும் பதவி கொடுப்பது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நிச்சயமாக பயனளிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்ணாமலைக்கு 41 வயதுதான், நிதின் நபினுக்கு அடுத்து முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது உறுதி என்கின்றனர் டெல்லி பாஜக தலைவர்கள்.
தனது ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் தீவிரவிசுவாசி. தமிழக தலைவராக பாஜகவின் வாக்குப் பங்கை 3% லிருந்து 11% ஆக உயர்த்திய அண்ணாமலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பாராட்டியுள்ளார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்கின்றனர். அதற்கு பதிலாக, பொதுச் செயலாளர் போன்ற டெல்லி சார்ந்த பொறுப்புகளில் அவர் கவனம் செலுத்துவார். அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு ஆக்ரோஷமான தலைவராக நற்பெயரை வளர்த்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் வலுவான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்.
