20k சம்பளம் வாங்குறீங்களா..? உங்கள் ராயல் என்ஃபீல்டு கனவு நனவாகப்போகுது! ₹5000ல் 350cc பைக்
Royal Enfield Bike on EMI: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ராயல் என்ஃபீல்டு பைக் வாங்க திட்டமிட்டால், இது உங்களுக்கான செய்தி. வெறும் ரூ.5000 முன்பணம் செலுத்தி ராயல் என்ஃபீல்டு ஹன்டர் பைக்கை வாங்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...

5,000 முன்பணத்துடன் ராயல் என்ஃபீல்ட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான மோகம் அதிகரித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் ராயல் என்ஃபீல்டு பைக் வாங்க விரும்பினால், ஹன்டர் 350 சிறந்த தேர்வாக இருக்கும்.
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பைக்கிற்கான நிதித் திட்டங்கள்
ஹன்டர் 350cc பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.60 லட்சம். ரூ.5,000 முன்பணம் செலுத்தி, ரூ.1.55 லட்சம் கடன் பெறலாம். 10% வட்டியில் 5 வருட காலத்திற்கு கடன் கிடைத்தால், மாதத் தவணை சுமார் ரூ.3,900 வரும்.
20,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு எளிதானது
உங்கள் மாதச் சம்பளம் ரூ.20,000 எனில், ரூ.3,900 மாதத் தவணை செலுத்துவது எளிது. இது உங்கள் பாக்கெட்டில் அதிக சுமையை ஏற்படுத்தாது. இந்த சம்பளத்தில் ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கை எளிதாக வாங்கலாம்.
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 எஞ்சின் திறன்
ஹன்டர் 350 பைக்கில் 349cc ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் J சீரிஸ் இன்ஜின் உள்ளது. இது 20.2 bhp பவரையும், 27 nm டார்க்கையும் உருவாக்கும். 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 மைலேஜ் மற்றும் அம்சங்கள்
ஹன்டர் 350-ன் ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜ் 36 kmpl. நிஜத்தில் 35 முதல் 38 km/l வரை மைலேஜ் கொடுக்கலாம். 13 லிட்டர் எரிபொருள் டேங்க், 17-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர், USB போர்ட் உள்ளன.

