- Home
- Spiritual
- செவ்வாய் தோஷம் முதல் ஏழரை சனி வரை... குச்சனூர் சனிபகவான் திருக்கோயில் மகா மகிமைகளும் பரிகாரங்களும்!
செவ்வாய் தோஷம் முதல் ஏழரை சனி வரை... குச்சனூர் சனிபகவான் திருக்கோயில் மகா மகிமைகளும் பரிகாரங்களும்!
Remedy for Brahmahathi Dosham Shani Temple : குச்சனூர் சனீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குமா? செவ்வாய் தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷங்களுக்கு இக்கோயிலில் செய்யப்படும் சிறப்பு பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம் முதல் ஏழரை சனி வரை
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்களுக்கும் ஜவ்வா தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கும் சிறந்த தளமாக குச்சனூர் சனி பகவான் திருக்கோயில் உள்ளது இங்கு வந்து அதற்கான பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இதனை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுயம்பு சனி பகவான்:
அதிகமான பக்தர்கள் சனி தோஷ நிவர்த்திக்காக சென்று வழிபடக் கூடிய தலம் குச்சனூர் சனிபகவான் கோயில். சனிபகவானுக்கு என்று இந்தியாவிலேயே தனியாக கோவில் இருக்கும் ஒரே தலம் குச்சனூர் மட்டும் தான். திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் தான் மூலவராக கருதப்படுகிறார். ஆனால் இங்கு சனீஸ்வரனே மூலவராக தனி சன்னதியில்காட்சி தருகிறார். இங்குள்ள சனீஸ்வரன் சுயம்புவாக லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவர் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்கள் ஒருங்கிணைந்த வடிவமாக கருதப்படுவதால் இவர் 6 கண்கள், நான்கு கைகள், இரண்டுபாதங்களுடன் காட்சி தருகிறார். கையில் சக்தி ஆயுதம், வில், அபய ஹஸ்தம் ஆகியவற்றை காட்டி அருள் செய்கிறார்.
சனியின் தாக்கம்:
சனிபகவான் பொதுவாக ஏழரை சனி ஜென்ம சனி, பாதசனி என்று ஜாதகத்தில் சனியின் தாக்கம் ஏற்படும். சன்னி தோசத்தினால் பல கஷ்டங்களையும், அனுபவித்து வருவர் நம்மளை ஒரு ஆட்டு ஆட்டி வைத்து விட்டது என்றே கூறலாம். குடும்ப வாழ்க்கையிலும் தொழில் மற்றும் கல்வி போன்றவைகளில் முன்னேற்றமே அடைய விடாது நம் முன்னால் செய்த பாவங்களை வைத்தே இந்த சனி தோஷம் நம்மளுக்கு வரும் என்று குறிப்பிடப்படுகிறது. செல்வம், சொத்துக்கள், சொந்தங்கள், மனைவி பிள்ளையில் இன்மை அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும்படி இந்த ஏழரை சனி ஆனது செய்துவிடும்.ஆனால் ஏழரை சனி முதல் எந்த சனி திசை நடந்தாலும் அவர்களின் முன் வினை கர்மாக்களை அழித்து கஷ்டங்களை போக்கி, நன்மைகள் பலவற்றை இந்த சனீஸ்வரர் அருள்வதாக சொல்லப்படுகிறது.
சனீஸ்வரர் கோயிலில் செய்யப்படும் பரிகாரங்கள்:
பிரம்மஹஸ்தி தோஷம் இருந்தால் இங்கு பரிகாரம் செய்யப்படும் அந்த தோஷத்தில் இருந்து விலகுவதற்கு ஒரு சிறந்த தளமாகவும் இக்கோயில் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்திலிருந்து விலகுவதற்கு இங்கு பரிகாரம் செய்யப்பட்டு வருகிறது இப்ப அதிகாரத்தின் மூலம் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. தடை இருப்பவர்களுக்கு இங்கு மஞ்சள் கயிறு மூலம் கட்டினால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. பாக்கியம் இல்லாதவர்களுக்கு மரத்தில் தொட்டில் கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.